4 மாதங்களில் தமிழகத்திற்கு அடுத்த தேர்தல்! நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு

Photo of author

By Anand

4 மாதங்களில் தமிழகத்திற்கு அடுத்த தேர்தல்! நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு

Anand

Chennai High Court Questions About Anti Corruption Department

4 மாதங்களில் தமிழகத்திற்கு அடுத்த தேர்தல்! உச்சநீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு

தமிழகத்தில் உள்ள நகராட்சி அமைப்புகளுக்கு அடுத்த நான்கு மாதங்களில் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது.இதனால் விரைவில் தேர்தலை நடத்த வேண்டிய கட்டாயம் மாநில தேர்தல் ஆணையத்திற்கு தற்போது ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் புதியதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் இரண்டு கட்டங்களாக நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து தேர்தல் பணிகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில் தான் நகராட்சி அமைப்புகளுக்கான தேர்தலையும் விரைவில் நடத்தி முடிக்க உச்சநீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.