உச்சநீதிமன்றத்தின் புதிய அறிவிப்பு!! இன்று முதல் இலவச வைஃபை சேவை!!
உச்சநீதிமன்றத்தில் நீண்ட காலமாக நிலுவையில் இருத்த இலவச வைஃபை திட்டம் இன்று முதல் அமலுக்கு வருவதாக தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கோடை விடுமுறையை முன்னிட்டு நீண்ட நாள் மூடப்பட்டிருந்த சுப்ரீம் கோர்ட்டு இன்று தான் இயங்க உள்ள நிலையில் நிலுவையில் உள்ள பல வழக்குகள் விசாரிக்கப்பட உள்ளது.
முதலாவதாக இன்று நாடு முழுவதும் பெரிதாக பேசப்படும் ஒன்றான மணிப்பூர் கலவரம் தொடர்பாக பல்வேறு வழக்குகள் தலைமை நீதிபதி முன் விசாரணைக்கு வந்தது.
இதனை போன்று நீண்ட காலமாக நிலுவையில் உள்ள பத்திர திட்டம் ,காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம் என்று பல்வேறு வழக்குகள் விசாரணைக்கு வந்த நிலையில் இவற்றிற்கு எல்லாம் வருகின்ற நாட்களில் முடிவு எடுக்கப்படும் என்று உச்ச்சத்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
அதனை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் இலவச வைஃபை சேவை இன்று முதல் தொடங்கப்பட உள்ளதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்த்திரசூட் அறிவித்துள்ளார்.
அதனால் உச்சநீதிமன்றத்தில் உள்ள முதல் 5 அறைகள் இலவச வைஃபை சேவையுடன் இருக்குமாறு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என்று அவர் அறிவித்துள்ளார்.
மேலும் ஆவணங்கள் மற்றும் சட்ட புத்தகங்கள் எந்த நீதிமன்ற அறைகளிலும் இருக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.இனி இருக்கும் அனைத்து நீதிமன்ற அறைகளும் வைஃபை சேவையுடன் இருக்கும் என்றார்.
எனவே இந்த இலவச வைஃபை சேவையை வழக்கறிஞர்கள் ,ஊடகவியலாளர்கள் மற்றும் மனுதாரர்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.