71 ரன்களில் சுருண்ட திருச்சி! பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை தக்க வைத்த சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி!!

0
60

71 ரன்களுக்கு சுருண்ட திருச்சி! பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை தக்க வைத்த சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி!!

 

இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நடப்பு டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று அதாவது ஜூன் 2ம் தேதி திருச்சி அணிக்கு எதிரான போட்டியில் விளையாடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வெற்றி பெற்று பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைத்துள்ளது.

 

நேற்று அதாவது ஜூலை 2ம் தேதி திருச்சி அணிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி விளையாடியது. இதில் டாஸ் வென்ற திருச்சி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

 

இதையடுத்து முதலில் பேட் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 129 ரன்கள் குவித்தது.

 

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் அதிகபட்சமாக ஆர் சிபி 31 ரன்களும், சசிதேவ் 25 ரன்களும், சஞ்சய் யாதவ் 20 ரன்களும் எடுத்தனர். திருச்சி அணியில் பந்துவீச்சில் கங்கா ஸ்ரீதர் ராஜூ அவர்கள் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். கே ஈஸ்வரன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

 

130 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கி திருச்சி அணியின் தொடக்க ஆட்டக்காரர் டி சரண் முதல் ஓவர் முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். மற்றொரு தொடக்க வீரர் கங்கா ஸ்ரீதர் ராஜூ 7 ரன்களுக்கு ஆட்டமிழக்க பின்னர் களமிறங்கிய டேரில் பெர்ராரியோ பொறுமையாக விளையாடி 45 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அதன் பிறகு இறங்கிய திருச்சி அணியின் பேட்ஸ்மேன்கள் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

 

இதனால் திருச்சி அணி 13.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 71 ரன்களுக்கு ஆட்டமிழந்து தோல்வி பெற்றது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் சிறப்பாக பந்துவீசி சிலம்பரசன் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். சஞ்சய் யாதவ் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்த போட்டியில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் பந்துவீச்சாளர் எம் சிலம்பரசன் அவர்கள் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

 

இந்த போட்டியில் 58 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி நடப்பு டிஎன்பிஎல் தொடரில் பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை தக்க வைத்துள்ளது.  புள்ளிப் பட்டியலில் முதல் மூன்று இடங்களின் முறையே கோவை, திண்டுக்கல், நெல்லை அணிகள் உள்ளது. இந்த மூன்று அணிகளும் பிளே ஆப் சுற்றுக்கு ஏற்கனவே தகுதி பெற்றுவிட்டது.

 

மீதம் உள்ள ஒரு இடத்திற்கு தற்பொழுது சேப்பாக் சூப்பர் கில்லீஸ், மதுரை, சேலம், திருப்பூர் ஆகிய நான்கு அணிகளுக்கு மத்தியில் போட்டி நிலவுகிறது. இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டும் என்றால் சேலம், திருப்பூர், மதுரை ஆகிய அணிகள் மீதம் உள்ள லீக் சுற்றில் தோல்வி அடைய வேண்டும். எனினும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் பிளே ஆப் சுற்று சிறிது சந்தேகம் தான்.