மனைவியுடன் கள்ளத்தொடர்பு என சந்தேகம்!! நண்பனின் கழுத்தை அறுத்தவுடன் செய்த ரத்தத்தை உறைய வைக்கும் கொடூர செயல் !!
தனது மனைவியுடன் நண்பனுக்கு கள்ளத் தொடர்பு உள்ளதாக நினைத்த கணவன் நண்பனை கழுத்தை அறுத்து கொடூர செயலில் ஈடுப்பட்டுள்ளான். இந்த நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது ,
கர்நாடக மாநிலம் சிக்பள்ளாபூரில் உள்ள சிந்தாமணி தாலுக்கா பட்டலபள்ளியை சேர்ந்தவர் விஜய் வயது 36. இவரது மனைவி மாலா. விஜய் மாலாவுடன் சிந்தாமணி டவுனில் வசித்து வருகிறார்.
பாகேபள்ளி தாலுக்கா மந்தம்பள்ளி கிராமத்தினை சேர்ந்தவர் மாரேஷ் வயது 34. விஜயின் நண்பரான இவர் விஜய் குடியிருக்கும் பகுதியில் தங்கியிருந்து அவருடன் சேர்ந்து சரக்கு ஆட்டோவில் துணிகளை ஏற்றிச் சென்று கிராமம், கிராமமாக விற்பனை செய்து வந்தனர்.
இதனால் அடிக்கடி விஜய் வீட்டிற்கு செல்லும் போது அவரின் மனைவி மாலாவுடன் பேசி வந்துள்ளார். இதனால் இருவருக்கும் கள்ளத்தொடர்பு தொடர்பு இருப்பதாக விஜய் சந்தேகம் கொண்டார். இந்த சந்தேகம் நாளுக்கு நாள் அதிகம் ஆகவே மாரேஷை விஜய் கொல்ல திட்டம் தீட்டினார்.
அதன்படி சம்பவத்தன்று விஜய், மாரேஷ் மற்றுமொரு நண்பர், ஆகிய இருவரையும் அழைத்துக் கொண்டு சித்தேப்பள்ளி கிராஷ் அருகே ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கு சரக்கு வண்டியை நிறுத்திய விஜய் மாரேஷிடம் தனது மனைவி உடனான கள்ளத் தொடர்பு பற்றி தகராறு செய்யவே மாரேஷ் மறுத்துள்ளார்.
அதில் ஆத்திரம் அடைந்த விஜய் மாரேஷை கீழே தள்ளி தான் வைத்து இருந்த கத்தியால் அவரின் கழுத்தை ஆட்டினை அறுப்பது போல அறுத்தது மட்டுமில்லாமல் அடுத்து அவர் செய்த காரியம் ரத்தத்தை உறைய வைப்பதாக இருந்தது. மாரேஷின் கழுத்தில் இருந்து வெளியேறிய ரத்தத்தை விஜய் உறிஞ்சு குடித்தார். இதை மற்றொரு நண்பர் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.
இந்த நிகழ்வை கேள்விப்பட்ட மாரேஷின் அண்ணன் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் இருதரப்பினரும் பேச்சு வார்த்தைக்கு தயாராகினர். இந்த சூழ்நிலையில் விஜய் ரத்தம் குடிக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
கடந்த 19ஆம் தேதி நடந்து தற்போது வெளிச்சத்துக்கு வந்த இந்த சம்பவம் காண்போரை உறையச் செய்துள்ளது. வீடியோ அடிப்படையில் போலீசார் மாரேஷிடம் புகாரைப் பெற்று விஜயை கைது செய்தனர். அவர் விசாரணையில் தந்து மனைவியுடன் மாரேஷ் கள்ளத் தொடர்பு வைத்து இருந்ததாக சந்தேகம் கொண்டதாகவும் எனவே அவர் கழுத்தை அறுத்து ரத்தம் குடித்ததாகவும் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். சந்தேகத்தால் நண்பனின் கழுத்தை அறுத்த துணி வியாபாரி ரத்தம் குடித்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.