கோவை மாவட்டத்தில் இன்று முதல் அமலான புதிய திட்டம்!! பின்னால் இருப்பவருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!!

0
110
New scheme effective from today in Coimbatore district!! Helmet is mandatory for the person behind!!
New scheme effective from today in Coimbatore district!! Helmet is mandatory for the person behind!!

கோவை மாவட்டத்தில் இன்று முதல் அமலான புதிய திட்டம்!! பின்னால் இருப்பவருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!!

கோவை மாவட்டத்தில் ஜூன் 26 ம் தேதி முதல் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று கோவை போக்குவரத்து துறை அறிவித்த  நிலையில் இன்று அதற்கான சோதனை மேற்கொள்ளப்பட்டது.

போக்குவரத்துக்கு நெரிசல் காரணமாக அதிக அளவில்  விபத்துகள் ஏற்பட்டு  உயிர் சேதங்களும் பெரும் அளவில் ஏற்படுகிறது. இந்த விபத்துகளின் மூலம் உயிரிழப்பு ஏற்படாமல் தடுக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் படி இனி இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்பவரும்  கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும்.

இன்று முதல் இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டது.திட்டம் அமலான அடுத்த முறையே  பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க  போலீசார் இன்று ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 இதனையடுத்து இன்று ஒருசிலர் போக்குவரத்து துறையின் உத்தரவின் படி, இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து இருப்பவரும் ஹெல்மெட் அணிந்திருந்தனர்.

அதிலும் சிலர் அணியாமல் வந்திருந்த நிலையில்  அவர்களை போலீசார் பிடித்து எச்சரித்தனர் பின்பு போக்குவரத்து பூங்காவிற்கு அழைத்து சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதுவரை கண்காணித்த போலீசார், ஒருசிலர் மட்டுமே இந்த திட்டத்தை கடைப்பிடிப்பதாகவும் பெரும்பாலான பொதுமக்கள் வழக்கம் போல் சென்றதாகவும் தெரிவித்தனர். இன்னும் ஒரு சில இடங்களில் மிகவும் மோசமாக  இருசக்கர வாகனத்தை ஓட்டுபவர்களே  ஹெல்மெட் அணியாமல் செல்கின்றனர் என்றும் தெரிவித்தனர்.

எனவே போலீசார் இனி கட்டாயம் இருசக்கரத்தில் பின்னால் இருப்பவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும் அவ்வாறு அணிய வில்லை என்றால் கட்டாயம் மோட்டார் வாகன சட்டத்தின் படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும்  தெரிவித்தனர்.

author avatar
Parthipan K