உங்களுக்கே தெரியாமல் மாரடைப்பு ஏற்பட வாய்ப்புண்டாம்? இது தான் அதன் அறிகுறிகள்!
உலகளவில் தற்போதும் நிகழும் அதிகளவு மரணத்திற்கு காரணமாக இருக்கும் நோயாக மாரடைப்பு இருந்து வருகிறது. தற்போதைய சில ஆண்டுகளாக மிகவும் இளம் வயதினரே மாரடைப்பு காரணமாக மரணித்து வருகின்றனர்.
உங்கள் இதயத்திற்கு வழக்கமாக செல்லும் இரத்த விநியோகம் திடீரென்று தடைபடும் போது மாரடைப்பு ஏற்படுகிறது, பெரும்பாலும் அப்போது இரத்த உறைவு ஏற்படுகிறது. அந்த வகையில் மாரடைப்பின் போது ஏற்படும் மிகவும் பொதுவான மற்றும் பரவலாக அறியப்பட்ட அறிகுறிகளில் ஒன்று மார்பு வலி, இது உங்கள் மார்பில் அழுத்தம், இறுக்கம் அல்லது அழுத்துதல் போன்ற உணர்வுகளால் வகைப்படுத்தப்படுகிறது.
இந்த உணர்வானது பொதுவாக உங்கள் மார்பின் நடுவில் ஆரம்பித்து கழுத்து, தாடை, காதுகள், கைகள் மற்றும் மணிக்கட்டுகள் போன்ற மற்ற உடல் பாகங்களுக்கு பயணிக்கலாம். இருந்தாலும், மார்பு வலி என்பது மட்டுமே மாரடைப்பு ஏற்படுவதற்கான ஒரே அறிகுறி அல்ல என்றும் கூறப்படுகிறது. சில சமயங்களில் மக்கள் லேசான மற்றும் குறைவான வெளிப்படையான அறிகுறிகளை அனுபவிக்கலாம். அவை உடனடியாக மாரடைப்பு என்று அவர்களைத் தாக்காது.அதை அவர்களால் உணர்ந்து கொள்ளவும் முடியாது.
அறிகுறிகள் பற்றிய ஆய்வு
சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், லாரி ஓட்டுநர் ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டதை உணராமலேயே மாரடைப்பால் பாதிக்கப்பட்டிருக்கிறார். அவர் வாகனம் ஓட்டும்போது சூடாகவும், வியர்வையாகவும் உணர்ந்துள்ளார். மேலும் “இது தனக்கு முன்பு இல்லாத ஒரு உணர்வு,” என்றும் அவர் கூறியுள்ளார்.
அதன் பிறகு அவர் தனது லாரியை நிறுத்தி சுமார் 20 நிமிடங்கள் ஓய்வு எடுத்தார். அதன்பின்னர் விரைவில் அவர் “முற்றிலும் நலமாக” உணர்ந்து மீண்டும் லாரியை ஓட்டத் தொடங்கியுள்ளார். ஏறக்குறைய ஒரு வருடம் கழித்து அவர் அப்போது அனுபவித்தது உண்மையில் மாரடைப்பு என்று மருத்துவர் கூறியுள்ளார்.
கவனிக்க வேண்டிய அறியப்படாத அறிகுறிகள்
CHSS இன் கூற்றுப்படி, வெப்பம் மற்றும் வியர்வை போன்ற உணர்வைத் தவிர, மாரடைப்புக்கான குறைவான வெளிப்படையான அறிகுறிகளும் உள்ளன, அவை மக்கள் அறிந்திருக்க வேண்டும். இவற்றில் சில அறிகுறிகள் உங்களுக்காக .
– உணர்வின்மை அல்லது உடம்பு சரியில்லை
– சருமம் சாம்பல் மற்றும் வெளிர் நிறத்தில் மாறுவது
– பொதுவாக உடல்நிலை சரியில்லாமல் இருப்பது
– பதட்டமாக உணர்வது
மாரடைப்புக்கான பிற அறிகுறிகள்
மாரடைப்பின் மற்ற முக்கிய அறிகுறிகள் பின்வருவனவற்றை உள்ளடக்குகின்றன:
– கழுத்து, தாடை, முதுகு, இடது கைக்கு கீழே அல்லது இரு கைகளிலும் வலி
– அமைதியின்மை அல்லது பதட்டம்
-மூச்சு திணறல்
– மயக்கம்
ஆண்கள் மற்றும் பெண்களுக்கு வேறுபட்ட அறிகுறிகள்
மாரடைப்புடன் தொடர்புடைய பொதுவான அறிகுறிகள் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு மாறுபடவும் வாய்ப்புண்டு என்று கூறப்படுகிறது. ஆண்களுடன் ஒப்பிடும்போது பெண்களுக்கு மார்பு வலி ஏற்படுவது சற்று குறைவாகவே உள்ளது.
அதுமட்டுமல்லாமல் மேலே குறிப்பிட்டுள்ள மற்ற அறிகுறிகளை அனுபவிக்கும் வாய்ப்பு அதிகம். மாரடைப்பு என்பது மருத்துவ அவசரநிலை, உங்களுக்கோ அல்லது உங்களைச் சுற்றியுள்ள யாருக்கோ மாரடைப்பு ஏற்பட்டால் உடனடியாக ஆம்புலன்ஸை அழைக்க வேண்டும் என்று அறிவுறுத்தபடுகிறது.
ஆபத்து காரணிகள்
கரோனரி இதய நோய் மாரடைப்புக்கு முக்கிய காரணமாக அமைகிறது. உடல்நலம் மற்றும் வாழ்க்கை முறை காரணிகள் சிலவும் ஆரோக்கிய நோய்களின் அபாயத்தை அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது. நாம் உண்ணும் உணவு முறை மாரடைப்பை ஏற்படுத்தும் முக்கியமான காரணியாக இருக்கிறது. பொதுவாக மாரடைப்பை ஏற்படுத்தும் முக்கிய காரணிகள் சிலவற்றை குறிப்பிட்டுள்ளோம்.
– புகைபிடித்தல்
– அதிக கொழுப்புள்ள உணவை உண்ணுதல்
– நீரிழிவு நோய்
-அதிக கொழுப்புச்ச்த்து
– உயர் இரத்த அழுத்தம்
– அதிக எடை அல்லது பருமனாக இருப்பது