நள்ளிரவில் சென்னையை பதறவைத்த சம்பவம்! காருக்குள் கத்தி கதறிய பள்ளி சிறுமி விவகாரத்தில் திடீர் திருப்பம்!

0
446
நள்ளிரவில் சென்னையை பதறவைத்த சம்பவம்! காருக்குள் கத்தி கதறிய பள்ளி சிறுமி விவகாரத்தில் திடீர் திருப்பம்!
chennai police crime

சென்னை தி நகர் அருகே பள்ளி சிறுமியை காரில் கடத்தியதாக சொல்லப்பட்ட விவகாரத்தில், உறவினர்கள் கேலி செய்ததால் கார் கண்ணாடி திறந்து அந்த திரும்பி கூச்சலிட்டதாக போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கடந்த 14ஆம் தேதி நள்ளிரவு சென்னை தி நகர் பசுல்லா சாலை சிக்னல் அருகே, கோடம்பாக்கம் நோக்கி சென்ற ஒரு காரில் இருந்த ஒரு இளம் பெண் கடத்தப்படுவதாகவும், அவர் உதவி கேட்டு கத்தி கதறி கூச்சலிட்டதாகவும் பொதுமக்கள் சிலர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தனர்.

இந்த தகவலை அடுத்து அசோக் நகர் போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை பார்வையிட்டனர். அதன்படி சிசிடிவி கேமரா காட்சிகளின் பதிவான அந்த காரின் பதிவெண்ணை கொண்டு விசாரணை செய்ததில், சாலிகிராமம் பகுதியை சேர்ந்த மகேந்திரன் என்பவரின் கார் என்பது தெரியவந்தது.

மேலும், போலீசார் நடத்திய விசாரணையில், மகேந்திரனின் சகோதரியின் 15 வயது மகள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றதை கொண்டாடுவதற்காக இரண்டு கார்களில் ஆழ்வார்பேட்டையில் உள்ள ஜூஸ் கடைக்கு சென்று விட்டு வீடு திரும்பி உள்ளனர்.

அப்போது அந்த மாணவி தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்ததாக கூறி, உறவினர்கள் கேலி செய்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த சிறுமி, அவர்களை அச்சுறுத்தும் விதமாக காரின் ஜன்னல் கண்ணாடியை இறக்கி, என்னை காப்பாற்றுங்கள் என்று கூச்சலிட்டது தெரியவந்துள்ளது. இதனை தவறாக புரிந்து கொண்ட பொதுமக்கள் சிறுமி காரில் கடத்தப்பட்டதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

பொதுவெளியில் இது போன்ற சம்பவங்களில் ஈடுபடக்கூடாது என்று சம்பந்தப்பட்ட சிறுமிக்கும், பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் அறிவுரை வழங்கிய போலீசார், அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.