இந்தியாவை சமாளிக்குமா பாகிஸ்தான்.? பரம எதிரிகளான இந்தியா-பாகிஸ்தான் இன்று மோதல்.!!

0
141

டி20 உலக கோப்பையில் இன்று நடைபெறும் சூப்பர் 12 சுற்றில் பரம எதிரிகளான இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் 17ஆம் தேதி முதல் நவம்பர் 14ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெறுகிறது.

கடந்த 2007ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட டி20 உலகக் கோப்பையை முதல் முதலில் இந்தியா வென்றது. 2009-ல் பாகிஸ்தான், 2010-ல் இங்கிலாந்து, 2012 & 2016-ல் மேற்கிந்திய தீவுகள், 2014-ல் இலங்கை அணியும் இதுவரை உலகக்கோப்பையை வென்றுள்ளன.

இன்று அக்டோபர் 17-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 14-ஆம் தேதி வரை போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் மொத்தம் 16 நாடுகள் கலந்து கொள்கின்றன. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாட தகுதி பெற்றுள்ளது.

இதில், தகுதி சுற்று போட்டியில் பி பிரிவில் இடம் பெற்றுள்ள ஸ்காட்லாந்து, வங்காளதேசம் அணிகளும், ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இலங்கை, நமீபியா அணிகள் புள்ளி பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்து சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

இந்நிலையில் இன்று நடைபெறும் சூப்பர் 12 சுற்றுப்போட்டியில் பரம எதிரிகளான இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

இதில், இன்று இரவு 7.30 மணிக்கு துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறும் போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோதுகின்றன.

கிரிக்கெட்டைப் பொறுத்தவரை இந்தியா பாகிஸ்தான் என்றால் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமில்லை. அந்த வகையில், இந்தியா உலகக் கோப்பையில் பாகிஸ்தானை அதிகமுறை தோற்கடித்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்தியா பாகிஸ்தான் கடைசியாக 2019ஆம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பையில் மோதியது. இதில், இந்திய அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதுவரை நேருக்கு நேர்

இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இதுவரை டி20 உலக கோப்பையில் 8 போட்டிகளில் மோதியுள்ளன. அதில், 6 போட்டிகளில் இந்திய அணியும், 1 போட்டியில் பாகிஸ்தான் அணியும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி டையில் முடிந்துள்ளது.

எதிர்பார்க்கப்படும் அணிகள்;

இந்திய அணி வீரர்கள்;
விராத் கோஹ்லி (கேப்டன்), ரோகித் சர்மா (துணை கேப்டன்), லோகேஷ் ராகுல், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), ரிஷாப் பன்ட் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்ட்யா, ரவிந்திர ஜடேஜா, வருண் சக்ரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, ஷர்துல் தாகூர்.

பாகிஸ்தான் அணி வீரர்கள்;
பாபர் ஆசம் (கேப்டன்), ஆசிப் அலி, பகார் ஜமான், ஹைதர் அலி, முகமது ரிஸ்வான், இமாத் வாசிம், முகமது ஹபீஸ், ஷதாப் கான், சோயப் மாலிக், ஹாரிஸ் ராப், ஹசன் அலி, ஷஹீன் ஷா அப்ரிதி.

 

 

 

Previous articleதொடர்ந்து இன்றும் உயர்ந்த பெட்ரோல் டீசல் விலை.! இன்றைய விலை நிலவரம்.!!
Next articleநிச்சயம் செய்த பெண்ணை படுக்கையறைக்கு அழைத்து வாலிபர் வெறிச்செயல்!! துடிதுடித்து உயிரிழந்த பெண்!!