நிச்சயம் செய்த பெண்ணை படுக்கையறைக்கு அழைத்து வாலிபர் வெறிச்செயல்!! துடிதுடித்து உயிரிழந்த பெண்!!

0
235

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த பட்டியாலாவில் வாழ்ந்து வருபவர் 40 வயதான நவ் நிந்தர் பிரிட்டபால் சிங். இவர் கணித ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் பதிந்தா பகுதியைச் சேர்ந்த சுபிந்தர்பால் கவுர் என்ற பெண்ணிற்கும் நிச்சயதார்த்தம் நடந்து இருந்தது.

இவர்களுக்கு அக்டோபர் 20ஆம் நாள் திருமணம் நடத்தி வைக்க முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், கடந்த 14ஆம் தேதி திருமணத்திற்காக ஷாப்பிங் செய்ய அப்பெண் பெற்றோர் அனுமதியுடன் பட்டியாலா வந்து தங்கியுள்ளார். அப்போது சைக்கோவாக மாறி அப்பெண்ணை கொலை செய்து அவரது படுக்கைக்குக் கீழ் குழிதோண்டிப் புதைத்து உள்ளார் நவ்நிந்தர்பிரிட்பால் சிங்.

அவருடைய பெற்றோர் கேட்கும்போது சுபிந்தர்பால் கவுர் தன்னோடு சண்டையிட்டு வீட்டை விட்டு வெளியேறியதாக கூறியுள்ளார். இந்நிலையில் பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின் பெயரில் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இதில், அவர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார்.
அப்போது இவர் தன்னுடைய முதல் மனைவியான சுத்திப் கபூர் இதேபோன்று திட்டம் தீட்டி கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்தார்.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் அவர்கள் இருவரையும் நைட்ரஜன் வாயுவை சுவாசிக்க வைத்து கொலை செய்துள்ளார். அப்போது அவர் மனைவி கர்ப்பமாக இருந்துள்ளார். அந்த வாயுவின் காரணமாக இறந்த தன் மனைவியை மாரடைப்பால் உயிரிழந்ததாக உறவினர்களிடம் நம்ப வைத்து உடலை அடக்கம் செய்ததாக ஒப்புக்கொண்டார்.

மேலும் நிச்சயிக்கப்பட்ட பெண்ணை நைட்ரஜன் வாயுவை வாசித்தால் முகத்தில் அழகு கூடும் என்று நம்பிக்கை வார்த்தை கூறி சுவாசிக்க வைத்துள்ளார். அப்போது அவர் சுயநினைவின்றி கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். அவரது உடலை படுக்கை அறையின் கீழே புதைத்து அதற்கு மேல் டைல்ஸ் ஓட்டியுள்ளார்.

இவரது இந்த விசித்திரமான போக்கு குறித்து அவரது குடும்பத்திற்கு அறிந்திருக்கவில்லை. மேலும் இதேபோன்று 2011ம் ஆண்டு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொலை செய்ததாக ஒரு புகார் உள்ளது அதனையும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். ஒரு கொலை வழக்கில் கைதாகி மற்றொரு கொலையையும் தான் செய்ததாக ஒப்புக் கொண்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Previous articleஇந்தியாவை சமாளிக்குமா பாகிஸ்தான்.? பரம எதிரிகளான இந்தியா-பாகிஸ்தான் இன்று மோதல்.!!
Next articleபாரதியிடம் கையும், களவுமாக சிக்கப்போகும் அஞ்சலி!! ஒற்றை ஃபோன் கால், சிக்கித்தவிக்கும் கண்ணம்மா, அஞ்சலி!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here