நொடிப்பொழுதில் சமயோசிதமாக செய்த காரியம்! பயணிகளின் உயிரை காத்த ஓட்டுனர்!
இமாச்சல பிரதேசத்தில் பயணிகளுடன் ஒரு பேருந்து ஒரு மலையில் சென்று கொண்டு இருந்தது. அப்போது திடீரென்று அந்த பேருந்தின் சக்கரம் வெடித்து விட்டது. அப்போது பள்ளத்துக்குள் விழ இருந்த அந்த பேருந்தை, தனது உயிரை பணயம் வைத்து பயணிகள் அனைவரும் வெளியேறும் வரை கட்டுப்பாட்டில் வைத்திருந்த டிரைவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இமாச்சல பிரதேசத்தில், சிர்மிர் மாவட்டத்தின் ஷில்லாய் பகுதியில் 22 பயணிகளுடன் தனியார் பஸ் சென்றது. தேசிய நெடுஞ்சாலை 707 பொஹ்ராட் காட் அருகே பஸ் சென்ற போது திடீரென சக்கரம் வெடித்தது. மேலும் அந்த பேருந்து தடுப்புகளை உடைத்துக்கொண்டு, பள்ளத்திற்குள் விழ இருந்தது. ஆனால் உடனடியாக சுதாரித்துக் கொண்டு ட்ரைவர் ப்ரேக் போட்டு, பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் இறங்கும் வரை ஓட்டுனர், பிரேக் பிடித்து கொண்டிருந்ததன் காரணமாக பேருந்து சாலைக்கும் இடையே தொங்கிய நிலையில் இருந்தது.
அப்போது அந்த பேருந்து டிரைவர் அதை கட்டுக்குள் கொண்டுவந்து பயணிகள் 22 பேரும் வெளியேறும் வரை பிரேக் பிடித்து வைத்திருந்தார். பேருந்தில் இருந்த பொதுமக்கள் அனைவரும் பத்திரமாக வெளியேறிய பின், ஓட்டுனரை பத்திரமாக மீட்ட தாக கூறப்படுகிறது.