ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூரத் திருவிழா!

0
214

ஸ்ரீவில்லிபுத்தூரில் இருக்கின்ற பிரபலமான ஆண்டாள் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் ஆண்டாள் பிறந்த பூர நட்சத்திரத்தை முன்னிட்டு ஆடிப்பூரத் திருவிழா நடந்து வருகின்றது.

அந்த விதத்தில் இந்த வருடம் சென்ற மூன்றாம் தேதி கொடியேற்றத்துடன் இந்த விழா ஆரம்பமானது. அரசின் உத்தரவுப்படி பக்தர்கள் யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. வீதி உலா நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. கோவிலுக்கு உள்ளேயே ஆண்டாள் ரங்க மன்னாருக்கு அலங்காரம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், நேற்றைய தினம் ஐந்தாவது நாள் திருவிழாவில் ஐந்து கருட சேவை நிகழ்ச்சி கோவில் வளாகத்திற்கு உள்ளேயே நடைபெற்றது என்று தெரிகிறது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் கோவில் தக்கார் ரவிச்சந்திரன், ஆண்டாள் கோவில் நிர்வாக அதிகாரி இளங்கோவன், உள்ளிட்டோர் செய்ததாக சொல்லப்படுகிறது.

ஒவ்வொரு வருடமும் கருடசேவை நிகழ்ச்சியின்போது லட்சக்கணக்கான பக்தர்கள் இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும் வந்து ஆண்டாளை தரிசனம் செய்து செல்வார்கள். நோய்த்தொற்று ஊரடங்கு அமலில் இருப்பதால் இந்த வருடம் பக்தர்கள் தரிசனம் செய்ய இயலாத சூழல் இருக்கிறது.

Previous articleநொடிப்பொழுதில் சமயோசிதமாக செய்த காரியம்! பயணிகளின் உயிரை காத்த ஓட்டுனர்!
Next articleஆடி அமாவாசை விரதம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here