கட்டணம் செலுத்தாமல் கூட வேறு தனியார் பள்ளிகளில் சேரலாம்! பெற்றோரை குளிர வைத்த உயர்நீதிமன்றம்!

0
91
Join other private schools without paying fees! The High Court that kept the parents cool!
Join other private schools without paying fees! The High Court that kept the parents cool!

கட்டணம் செலுத்தாமல் கூட வேறு தனியார் பள்ளிகளில் சேரலாம்! பெற்றோரை குளிர வைத்த உயர்நீதிமன்றம்!

கடந்த ஒரு வருட காலமாகவே மாணவர்கள் பள்ளிக்குச் செல்லாமல், வீட்டிலேயே ஆன்லைன் கல்வி மூலம் பயின்று வருகின்றனர். ஆனாலும் பள்ளிகளில் 75 சதவிகிதம் முதல் 80 சதவிகிதம் வரை கட்டணங்கள் செலுத்தப்பட வேண்டும் என்று நிபந்தனை விதிக்கின்றனர்.  பெற்றோர்கள் ஏற்கனவே கொரோனாவின் காரணமாக தங்களது  வாழ்வாதாரம் புரட்டிப்போட்ட நிலையில், எல்லாருமே மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறார்கள்.

மேலும் இருக்கும் வீட்டு செலவுகளை சமாளிக்கவே பெரிய விசயமாகவே  இருக்கிறது. இதில் தனியார் பள்ளிக் கட்டணத்திற்கு என்று கணிசமான தொகையை கொடுக்க வேண்டி உள்ளது. எனவே பெற்றோர் மிகுந்த மன உளைச்சலில் உள்ளனர். அவர்களின் மனதைக் குளிர வைக்கும் விதமாக தற்போது சென்னை ஹை கோர்ட் தீர்ப்பு பெற்றோருக்கு சாதகமாக வழங்கியுள்ளது.

போன வருடம் வரை 75 சதவீதமாக, இருந்த தனியார் பள்ளி கட்டணங்கள் 85 சதவிகிதம் கட்ட வேண்டும் என்று கடந்த வாரம் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. பல பெற்றோரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதன் காரணமாக பல மாணவர்கள் தற்போது பள்ளி கட்டணம் செலுத்த முடியாமல், அதன் காரணமாக அரசுப் பள்ளிகளை நாடிச் செல்கின்றனர்.

எனவே அரசு தரப்பில் பல்வேறு சலுகைகளை பள்ளிகளுக்கு செய்து தர பள்ளி கல்வி துறை அமைச்சர் கூறியுள்ளார். மாணவர்களுக்கு தற்போது அதன் காரணமாக வேறு பள்ளிகளில் அல்லது கட்டணம் குறைவாக உள்ள பள்ளிகளுக்கு மாறும் மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் இல்லாமல், வேறு சில தனியார் பள்ளிகளில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சில பிரச்சினைகள் இருந்த காரணத்தினால் மாற்றுச்சான்றிதழ் இல்லாவிட்டாலும் வேறு பள்ளிகளில் சேர்ந்து படிக்க விரும்பும் மாணவர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை தற்போது உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

இதனை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ஐக்கிய பள்ளிகள் சங்கம்,  என்ற அமைப்பு ஒரு வழக்கைத் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பின் மூலம் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்ட விடக்கூடாது என்பதாலும், மாற்றுச்சான்றிதழ் இல்லாமலும் பள்ளியில் சேர்க்க அனுமதி வழங்கப்பட்டது என்றும் தெரிவித்தனர். இந்த கருத்தினை பதிவு செய்த நீதிபதி மாற்றுச்சான்றிதழ் மிகவும் அவசியமான ஒன்றுதான். ஆனால் அது சாத்தியமில்லாத விஷயம் தான் என்றாலும் தற்போது மாற்று சான்றிதழ் இல்லாத காரணத்தினால் மட்டும் ஒரு மாணவனின் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்ற காரணத்தை முன்வைத்து சான்றிதழ் இல்லாத காரணத்தாலும் மாணவர்கள் பள்ளியில் சேர்க்க அனுமதிக்கப்பட வேண்டும்.

எனவே  மாற்று சான்றிதழ் இல்லாததால் மறுப்பு தெரிவிக்க கூடாது என்றும், தனியார் பள்ளிகளுக்கு நீதிபதி அறிவுறுத்தியுள்ளார். மேலும் நீதிமன்ற உத்தரவை மீறி செயல்படும் பள்ளிகளுக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரவும் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். இது பெற்றோரின் மனதை குளிர்விக்கும் விஷயமாகவும், அவர்கள் பண நெருக்கடியை குறைக்கும் விஷயமாகவும் உள்ளது.