கடைசி தடைக்கல்லையும் தகர்த்து எறிந்த உச்சநீதிமன்றம்! வரவேற்கும் மருத்துவர் ராமதாஸ்
ஆண்களுக்கு சமமாக பெண்களுக்கும் சொத்துரிமை வழங்கி உச்சநீதிமன்ற அளித்த விளக்கம் தெளிவானது மற்றும் வரவேற்கத்தக்கது என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது. இந்தியாவில் 2005-ஆம் ஆண்டுக்கு முன் பிறந்த பெண்களுக்கும் குடும்பச் சொத்துகளில் சம அளவு பங்கு உண்டு என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. பெண்களின் சொத்துரிமை தொடர்பான கடைசி தடைக்கல்லையும் தகர்த்து எறிந்துள்ள உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கதாகும். இந்தியாவில் நீண்ட காலமாக மகளிருக்கு சொத்துரிமை மறுக்கப்பட்டு … Read more