அதிமுக தலைமையகத்திலிருந்து ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்களால் எடுத்து செல்லப்பட்ட ஆவணங்கள் அதிமுகவினரிடம் ஒப்படைப்பு!!

அதிமுக தலைமையகத்திலிருந்து ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்களால் எடுத்து செல்லப்பட்ட ஆவணங்கள் அதிமுகவினரிடம் ஒப்படைப்பு! சென்னை சைதாப்பேட்டை பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கையெழுத்திட்டு அதிமுக ஆவணங்களை பெற்றுக்கொண்டார். கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தின் கதவை உடைத்து , அலுவலகத்தினுள் நுழைந்து ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் எடுத்துச் சென்ற ஆவணங்கள் சென்னை சைதாப்பேட்டை பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி சந்தோஷ் முன்னிலையில் சிபிசிஐடி காவலர்கள் மூலம் அதிமுகவினரிடம் ஒப்படைக்கப்பட்டன . … Read more

கவர்னர் மாளிகை அருகே ஏராளமான அதிமுகவினர் திரண்டதால் போலீசாருக்கும்  அதிமுகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது!

கவர்னர் மாளிகை அருகே ஏராளமான அதிமுகவினர் திரண்டதால் போலீசாருக்கும்  அதிமுகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது! ஆளுநர் மாளிகை அருகே அதிமுக தொண்டர்கள் பெருமளவில் குவிந்ததால் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறைக்கும் அதிமுக தொண்டர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் மாநிலங்களவை உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான சண்முகத்தின் வாகனம் உள்ளே அனுமதிக்கப்படாமல் சிறிது நேரம் காக்க வைக்கப்பட்டது.மேற்கொண்டு  சி வி சண்முகம் கடும் டென்ஷன் ஆனார். தமிழக அரசுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து அதிமுக சார்பில் நேற்று … Read more

தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த அதிமுக உறுப்பினர்கள்

தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த அதிமுக உறுப்பினர்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், திமுக கழகத் தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில், அ.தி.மு.க.வைச் சேர்ந்த ஆ.திருமுருகன், தினேஷ்குமார், சுரேஷ், மணிகண்டன், சாமிநாதன், ராஜேஷ் கண்ணன் ஆகியோர் தி.மு.க.வில் இணைந்தனர். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில், இன்று (21.4.2023) காலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், அ.தி.மு.க.வைச் சேர்ந்த ஆ.திருமுருகன், தினேஷ்குமார், சுரேஷ், மணிகண்டன், சாமிநாதன், ராஜேஷ் கண்ணன் ஆகியோர் … Read more