முடிந்தது தேர்தல்! வெளியாகிறது கருத்துக் கணிப்புகள்!

இன்று மாலை ஏழு மணியுடன் மேற்கு வங்காளத்தில் எட்டாம் கட்ட மற்றும் கடைசி கட்ட தேர்தல் முடிவுக்கு வருகிறது. ஆகவே தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு படி தமிழ்நாடு, புதுவை, கேரளா, அசாம் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தலுக்கு பிந்தைய எக்ஸிட் போல் எனப்படும் கருத்துகணிப்பு இன்று இரவு ஏழு முப்பது மணிக்கு வெளியாவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழகம், புதுவை, அசாம், கேரளா, ஆகிய மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் ஏற்கனவே கடந்த 6-ஆம் தேதியுடன் முடிவடைந்து இருக்கின்ற நிலையில், … Read more

புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் அத்துமீறல்! திமுக சார்பாக புகார்!

கடந்த ஆறாம் தேதி சட்டசபை தேர்தல் தமிழகத்தில் நடைபெற்றது 234 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.என்னை தொடர்ந்து அனைத்து வாக்குபெட்டிகளும் அந்தந்த வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உரிய பாதுகாப்புடன் வைக்கப்பட்டு இருக்கிறது. அந்தந்த வாக்குச் சாவடி வாக்கு எண்ணும் மையங்களில் துணை ராணுவப் படையும் , தமிழக காவல்துறையும், இணைந்து சுழற்சிமுறையில் பாதுகாப்பு பணியினை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சூழ்நிலையில் புதுக்கோட்டை வாக்கு எண்ணும் மையத்தில் தொடர்ச்சியாக விதிமீறல்கள் நடந்து கொண்டிருப்பதாக … Read more

விராலிமலையில் மாற்றப்பட்டதா வாக்குப்பதிவு இயந்திரம்! திமுகவினரின் புகாரால் பரபரப்பு!

நேற்று முன்தினம் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வெகுவிமர்சையாக நடந்து முடிந்தது. காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த வாக்குப்பதிவு இரவு 7 மணி வரையில் அமைதியான முறையில் நடைபெற்றது.ஏழு மணிக்கு பிறகு வாக்குப்பெட்டிகள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு உரிய பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு இருக்கிறது.அந்தந்த மையங்களிலும் துணை ராணுவ படை மற்றும் காவல்துறையினர் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். அதோடு மட்டுமல்லாமல் அரசியல் கட்சி பிரமுகர்களும் … Read more

முக்கிய தொகுதியின் வேட்பாளரை காணவில்லை! வேட்பாளரின் மனைவி பரபரப்பு புகார்!

ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி ஆன நாளை தமிழகம் கேரளா புதுவை ஆகிய 3 மாநிலங்களில் ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த நிலையில் இந்த மாநிலங்களுக்கான பிரச்சாரங்கள் நேற்று இரவு 7 மணி உடன் நிறைவடைந்திருக்கிறது. இந்த நிலையில், இன்று முதல் தேர்தல் பிரசாரத்தில் யாரும் ஈடுபடக் கூடாது என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி இருக்கிறது. இந்த சூழ்நிலையில், புதுச்சேரியில் இருக்கின்ற ஏனாம் சட்டசபை தொகுதியில் சுயேச்சை வேட்பாளரை காணவில்லை என்று அவருடைய மனைவி … Read more

பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்ட தமிழகம்! தேர்தல் பாதுகாப்பு பணி தீவிரம்!

தமிழகத்தில் நாளை தமிழக சட்டசபைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதில் தமிழகத்தில் இருக்கக்கூடிய 234 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி இரவு 7 மணி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் கொரோனா தொற்று இருப்பவர்கள் மாலை 6 மணி அளவில் இருந்து 7 மணிக்குள் வாக்குச்சாவடிக்கு வந்து தங்களுடைய வாக்கை செலுத்துவதற்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. அதாவது நாளை நடைபெறும் சட்டசபை தேர்தலில் … Read more

விரைவில் தேர்தல்! தமிழக தேர்தல் ஆணையம் விறுவிறு ஏற்பாடு!

தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது அதனை தொடர்ந்து 9 2300 வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் செய்யப்பட்டு இருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்திருக்கிறார். தமிழக சட்டசபை தேர்தல் ஒரு சில மாதங்களில் நடைபெற இருக்கின்ற நிலையில், தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் மிக தீவிரமாக இறங்கி வருகிறார்கள். அதே சமயத்தில் தமிழகத் தேர்தல் ஆணையமும் சட்டசபை தேர்தலுக்கான வேலைகளை மிகத் தீவிரமாக செய்து வருகின்றது. அந்தவிதத்தில், தேர்தலில் … Read more

சூறாவளியாய் சுழன்று அடிக்கும் எடப்பாடி அலை! எதிர்நீச்சல் போட்டு பார்க்கும் திமுக!

வரும் ஏப்ரல் ,அல்லது மே, மாதங்களில் தமிழகத்திற்கான சட்டசபை தேர்தல் நடைபெறும் என்று சொல்லப்படுகின்ற நிலையில், தமிழகத்தில் இருக்கின்ற அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் மூழ்கி இருக்கின்றன. அந்த வகையிலே, தமிழகத்தில் ஆளும் கட்சியான அதிமுகவும், எதிர்கட்சியான திமுகவும், தேர்தல் பணிகளில் மிகத் தீவிரமாக இறங்கியிருக்கின்றன. அதிமுக சார்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தன்னுடைய முதல் கட்ட தேர்தல் பிரச்சாரத்தை டிசம்பர் மாதம் 19ஆம் தேதி தொடங்கி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்து … Read more

தமிழகத்தில் முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படுமா? தேர்தல் ஆணையம் சூசக தகவல்!

தமிழ்நாட்டிற்கு ஒரே கட்டமாக தேர்தலை நடத்துவது தொடர்பாக பரிசீலனை செய்து முடிவு செய்வதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கின்றது. தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல், அல்லது மே, மாதங்களில் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் குறித்து ஆலோசனை செய்ய தமிழகம் வந்த இந்திய தேர்தல் ஆணையம் தலைமை செயலாளர் சின்கா அடங்கிய குழு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் நேற்றைய தினம் ஆலோசனை செய்தது இதனையடுத்து இன்று மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல் உயர் அதிகாரிகளுடன் தேர்தல் … Read more

உளவுத்துறை தந்த ரிப்போர்ட்! அதிரடியில் இறங்கிய முதல்வர்!

திமுகவிற்கு இணையாக சப்தமே இல்லாமல் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை தயார் செய்து தேர்தல் பணிகளை ஆரம்பிப்பதற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தயாராகி விட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. ஜெயலலிதா போலவே தேர்தல் அறிவிப்பதற்கு முன்பே வேட்பாளர் பட்டியலை தயார் செய்து பிரசாரத்தை ஆரம்பிப்பதுதான் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் திட்டம் என்று சொல்கிறார்கள் அதே நேரம் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை இடங்கள் ஒதுக்குகிறார்கள் காங்கிரஸ் சார்பாக யார் யார் போட்டியிட இருக்கிறார்கள் என்பதோடு திமுக கூட்டணி … Read more

கூட்டம் போட்டாலே மட்டன் பிரியாணி தான்! ராஜேந்திர பாலாஜி காரசார பேச்சு!

தேர்தல் வந்துவிட்டால் கொடுப்பதும் தெரியக்கூடாது, வாங்குவதும் தெரியக்கூடாது, எடுப்பதும் தெரியக்கூடாது. அனைத்தையும் ரகசியமாக ஆலோசனை செய்வோம் எவ்வாறு வெற்றி பெறுவது என்று எங்களுக்கு தெரியும் என பால்வளத்துறை அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி தெரிவித்திருக்கின்றார். விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர்களுடைய தலைமையில் நடைபெற்றது. இதில் பங்குபெற்ற அமைச்சர் ராஜேந்திரபாலாஜி விருதுநகர் மாவட்டத்தில் எங்களுடைய கட்சி கூட்டம் போட்டாலே அனைவருக்கும் மட்டன் … Read more