ஐ எஸ் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பு! சென்னையில் 4 பேர்களின் வீடுகளில் அதிரடி சோதனை!

கடந்த மாதம் 23ஆம் தேதி கோவை உக்கடம் பகுதியில் இருக்கின்ற கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு கார் திடீரென்று வெடித்து சிதறியது. இந்த விபத்தில் அந்த காரில் இருந்த ஒரு நபர் உயிரிழந்தார். ஆனால் அந்த கார் வெடிப்பு விபத்தில் உயிரிழந்த நபர் தீவிரவாதிகளின் பட்டியலில் இருப்பதாகவும், அவரை தேசிய புலனாய்வு முகமை கண்காணித்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது. அவரைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று மத்திய உளவுத்துறை தமிழக காவல்துறைக்கு எச்சரிக்கை செய்தும் … Read more

கோவை கார் வெடிப்பு சம்பவம் தேசிய புலனாய்வு முகமை கைக்கு வந்த பட்டியல்! கோவையை அலசும் என்.ஐ. ஏ!

கோவை உக்கடம் பகுதியில் இருக்கும் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு தீபாவளிக்கு முந்தைய நாள் ஒரு கார் நின்று கொண்டு இருந்தது. அந்த கார் திடீரென்று வெடித்து சிதறியது. இதில் காரில் இருந்த ஜமிஷா முபின் என்பவர் உயிரிழந்தார். அவருடைய வீட்டிலிருந்து நாட்டு வெடி மருந்துகள் கைப்பற்றப்பட்டதுடன் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பிற்கு ஆதரவாக சில குறிப்புகள் கண்டெடுக்கப்பட்டிருந்தது. ஒற்றை ஓநாய் தாக்குதல் என்ற வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கலாம் என்று தகவல் வெளியானது. அதற்கு முன்பாகவே … Read more

அந்த விவகாரத்தை நாங்கள் கையில் எடுக்காவிட்டால் உண்மை வெளிவந்திருக்காது! அண்ணாமலை அதிரடி!

கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவத்தை பாரதிய ஜனதா கையில் எடுத்ததால்தான் உண்மை வெளியே வந்தது என்று தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை தெரிவித்து இருக்கிறார். மதுரையில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை தெரிவித்ததாவது கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவத்தை பாஜக கையில் எடுத்ததால் தான் உண்மை வெளியே வந்திருக்கிறது. இல்லாவிட்டால் சிலிண்டர் விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பம் பாவம் என்று தெரிவித்து அவர்களில் ஒருவருக்கு திமுக அரசு வேலை வழங்கியிருக்கும் ஹிந்தி திணிப்பு … Read more

கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம்! தேசிய புலனாய்வு முகமையின் விசாரணைக்கு மறைமுகமாக எதிர்ப்பு தெரிவிக்கும் ஜவாஹிருல்லா காரணம் இதுதானா?

சமீபத்தில் கோவை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழகத்தையே உலுக்கிய சம்பவம் கோவையில் உக்கடம் பகுதியில் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே நடைபெற்ற கார் குண்டு வெடிப்பு சம்பவம். இந்த சம்பவம் எதற்காக நிகழ்த்தப்பட்டது, ஏன் நிகழ்ந்தது? என்று யோசிப்பதற்குள் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று விட்டனர். அதாவது இந்த கார் வெடிப்பு சம்பவம் நடைபெற்ற போது அதில் அந்த காரில் இருந்த ஒரு நபர் உயிரிழந்தார். அந்த நபர் தேசிய புலனாய்வு முகமையால் விசாரிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தார் என்றும் சொல்லப்படுகிறது. … Read more