கர்நாடகாவின் முடிவிற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசு! செவிசாய்க்குமா மத்திய அரசு?

தமிழ்நாட்டிற்கு குடிநீர் ஆதாரமாக விளங்கி வரும் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டும் முடிவில் கர்நாடக அரசு மிகவும் உறுதியாக இருக்கிறது. ஒருவேளை அந்த பகுதியில் அணை கட்டப்பட்டு விட்டால் தமிழ்நாட்டிற்கு தற்போது வந்து கொண்டிருக்கும் காவேரி நதி நீர் முழுவதுமாக நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக, மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவதற்கு தமிழக அரசு ஆரம்பத்திலிருந்தே கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றது. இதனை பிரதமர் நரேந்திர மோடியின் கவனத்திற்கு … Read more

யூகங்களுக்கு நான் பதில் கூற விரும்பவில்லை! முதலமைச்சர் அதிரடி!

பாரதிய ஜனதா கட்சியின் மேலிடம் விருப்பப்பட்டால் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய தயார் என்று கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்திருக்கிறார். கட்சியின் மேலிடம் இந்த வாய்ப்பை வழங்கியிருக்கிறது நான் அதனை பயன்படுத்த முயற்சிக்கின்றேன், அதேபோல மக்கள் சேவையாற்றுவதற்கு முயற்சி செய்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார் எடியூரப்பா. எனக்கு எதிராக கருத்துத் தெரிவிப்போறின் யூகங்களுக்கு நான் எந்தவிதமான கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை என்று தெரிவித்திருக்கிறார். என்னுடைய கட்சியின் மேலிடம் நான் ராஜினாமா செய்ய வேண்டுமென்று விருப்பப்பட்டால் நான் ராஜினாமா செய்ய … Read more

சொன்னா கேளுங்க! மக்களிடம் கைகூப்பி கோரிக்கை வைத்த முதல்வர்!

நாடு முழுவதும் நோய்த்தொற்றின் தாக்கம் அதிகரித்து வருவதால் மத்திய மாநில அரசுகள் அதனை கட்டுப்படுத்துவதற்கு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்கள். இருந்தாலும் தொற்றின் தாக்கம் குறைந்தபாடில்லை. மத்திய மாநில அரசுகள் பொது மக்களுக்கு முக கவசம் அணிய வேண்டும் என்ற கட்டாய உத்தரவை பிறப்பித்து இருந்தாலும் அதனை பொதுமக்கள் சற்றும் சட்டை செய்ததாகத் தெரியவில்லை. அதன் காரணமாகவே இந்த நோய் தொற்று மிக வேகமாகப் பரவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அதோடு வட மாநிலங்களில் இந்த நோய் தொற்றினால் … Read more

முதல்வருக்கு எதிராக ஆளுநருக்கு பறந்த புகார்! அரசியலில் திடீர் பரபரப்பு!

கர்நாடக மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்தக் கட்சியின் மாநில தலைவர் எடியூரப்பா முதலமைச்சராக இருந்து வருகிறார். காங்கிரஸ் கட்சியின் கூட்டணியில் குமாரசாமி முதலமைச்சராக இருந்து வந்தார். இந்த நிலையில் அவருடைய ஆட்சி எம்எல்ஏக்கள் பலம் இல்லாததால் ஆட்சி கலக்கப்பட்டது அதன் பிறகு பெரும்பான்மையான சட்டசபை உறுப்பினர்கள் இருந்ததால் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைத்தது. இந்த நிலையில், கர்நாடகாவில் முதலமைச்சர் எடியூரப்பா தலைமையில் நடைபெற்றுவரும் அமைச்சரவையில் கிராம மேம்பாட்டு துறை … Read more

கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் வாங்கியதில் 2 ஆயிரம் கோடி ஊழல்! முதல்வரின் முறைகேடு அம்பலம்

Corona Test Kit

கர்நாடகத்தில் ஆளும் கட்சியான பிஜேபியின் முதலமைச்சர் எடியூரப்பா அரசு, கொரோனா சிகிச்சைக்காக மருத்துவ உபகரணங்கள் வாங்கியதில், 2000 கோடி ரூபாய் ஊழல் செய்திருப்பதாக அம்மாநில எதிர்க்கட்சி அமைப்பான காங்கிரசின் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா மற்றும் அம்மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் டி.கே.சிவகுமார் உள்ளிட்டோர் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். இன்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது; “கடந்த 3ஆம் தேதியே கொரோனா சிகிச்சைக்காக மருத்துவ உபகரணங்கள் வாங்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக கூறியிருந்தேன், இதன் காரணமாக 20 முறைக்கு மேல் … Read more

காங்கிரசாரின் நாடகம் எடுபடாது; குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக எடியூரப்பா கருத்து

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து நாடு முழுவதும் தீவிர போராட்டம் நடந்து வருகிறது. கர்நாடகத்தில் நடைபெற்ற போராட்டத்தில் மங்களூருவில் வன்முறை வெடித்தது. போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பேர் மரணம் அடைந்தனர். இந்த நிலையில் பா.ஜனதா சார்பில் குடியுரிமை திருத்த சட்டம் குறித்து சிறுபான்மையின மக்களுக்கு உண்மையை தெரியப்படுத்தும் விழிப்புணர்வு பிரசாரம் செய்ய முடிவு திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி கர்நாடகத்தில் இந்த பிரசாரத்தை பா.ஜனதா தொடங்கியுள்ளது. பெங்களூரு சிவாஜிநகரில் குடியுரிமை திருத்த … Read more