எடப்பாடி பழனிச்சாமிக்கு அழைப்பு விடுத்த பன்னீர்செல்வம்!

அதிமுகவின் பொதுக்குழுவிற்கு எதிராக பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. அதில் ஜூன் மாதம் 23ஆம் தேதிக்கு முன்பிருந்த நிலையே அதிமுகவில் தொடர வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த நிலையில், சென்னை பசுமைவழிச் சாலையில் ஆதரவாளர்களுடன் பன்னீர்செல்வம் பத்திரிகையாளர்களை சந்தித்து உரையாற்றினார். அப்போது அதிமுகவிலிருக்கின்ற ஒன்றரை கோடி தொண்டர்களுக்கு நன்றி, எங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அசாதாரண சூழ்நிலை அதிமுகவில் உண்டானது. அவற்றை அவற்றை மனதில் இருந்து நீக்கிவிட வேண்டும், … Read more

கட்சியிலிருந்து நீக்கியதை தொடர்ந்து ஓபிஎஸ்-க்கு அடுத்த அதிர்ச்சியை கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி!

கடந்த 11ம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற்ற அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் மேற்கொள்ளப்பட்டது. அதாவது அந்த கூட்டத்தில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட பதவிகள் நிரந்தரமாக நீக்கப்பட்டு பொதுச் செயலாளர் என்ற பொறுப்பு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிலையில், இடைக்கால பொதுச் செயலாளராக தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து கட்சி அலுவலகத்தில் அத்து மீறிய அந்தக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் அவருடைய … Read more

அதிமுகவிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்ட பன்னீர்செல்வம் எடுத்த அடுத்த அதிரடி வியூகம்! சமாளிப்பாரா எடப்பாடி பழனிச்சாமி?

அதிமுகவில் தற்போது அந்த கட்சி மீண்டும் பிளவு பட்டு விடுமோ என்ற சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. அதாவது எம்ஜிஆர் உயிரிழந்த சமயத்தில் எப்படி ஜானகி அணி, ஜெயலலிதா அணி, என இரு அணிகளாக அந்த கட்சி பிளவு பட்டதோ அதேபோன்று ஒரு நிலை மீண்டும் தற்போது வந்து விடுமா என்ற சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. அதாவது கடந்த 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுகவின் பொதுக்குழுவில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட பதவிகள் ரத்து செய்யப்பட்டு, பொதுச்செயலாளர் என்ற … Read more

அதிமுக பொதுக்குழுவில் குழப்பங்களை தவிர்க்க புதிய யுக்தியுடன் களமிறங்கும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு!

வருகின்ற 11ஆம் தேதி நடைபெறவிருக்கின்ற அதிமுக பொதுக்குழுவில் குழப்பங்களை தவிர்க்க ஹைடெக்காக எடப்பாடி பழனிச்சாமி தரப்பு களமிறங்கியிருக்கிறது. கடந்த ஜூன் மாதம் 23ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் முதல் முறையாக புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்ட நிலையில், இந்த முறை கூடுதலாக RFID தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பொதுக்குழு உறுப்பினர்களை பரிசோதனை செய்த பிறகு தான் ஒவ்வொரு உறுப்பினரும் பொதுக்குழு நடைபெறும் இடத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று சொல்லப்படுகிறது. பொதுக்குழு அல்லாத உறுப்பினர்கள், வேறு நபர்கள், … Read more

அப்படி போடு நானா.. பதவியை மாற்றிக் கொண்ட எடப்பாடி பழனிசாமி!!

Put it like that Nana .. Edappadi Palanisamy who changed the post !!

அப்படி போடு நானா.. பதவியை மாற்றிக் கொண்ட எடப்பாடி பழனிசாமி!! கடந்த மாதம் 23ஆம் தேதி அன்று அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் குழப்பம், கூச்சல் , சண்டை,பரபரப்பு என்று நிறைவடைந்த நிலையில் கட்சியில் 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய இரு பதவிகளும் காலாவதியாகி விட்டதாகவும் இபிஎஸ் ஆதரவு நிர்வாகிகள் கூறினார்கள். அதிமுக தலைவராக எடப்பாடி பழனிசாமி தான் இப்பொறுப்பை ஏற்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் போர்க்கொடி … Read more

டெல்லியின் ஆதரவை எதிர்பார்க்கும் ஓபிஎஸ்! பலிக்குமா எடப்பாடி பழனிச்சாமியின் கனவு?

பிரதமர் நரேந்திர மோடியும் உள்த்துறை அமைச்சர் அமித்ஷாவும், கேட்டுக் கொண்டதால் நான் 2017 ஆம் ஆண்டு பழனிச்சாமியுடன் இணைந்தேன். ஆகவே அவர்கள் இருவரும் நம்மை கைவிட மாட்டார்கள் என்று ஆதரவாளர்களுக்கு அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் நம்பிக்கை வழங்கி வருவதாக தகவல் கிடைத்திருக்கிறது. இரட்டை தலைமை நீக்கிவிட்டு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிச்சாமி கட்சியின் பொதுச் செயலாளராவதற்கு அவருடைய ஆதரவாளர்கள் முயற்சி செய்தனர் இதற்கு பன்னீர்செல்வம் தரப்பு எதிர்ப்பு தெரிவித்ததால் 5 வருடங்களுக்கு பின்னர் மறுபடியும் அதிமுகவில் கட்சி … Read more

கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் பதவி செல்லாத நிலையில் இடைத்தேர்தல்! ஒப்புதல் வழங்கப் போவது யார் அதிமுகவிற்கு ஏற்பட்ட புதிய சிக்கல்!

ஊரக நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் பொறுப்பு வகித்தவர்களில் சிலர் உயிரிழந்ததாலும், சிலர் பதவி விலகியதாலும், அந்த இடங்கள் காலியாக இருக்கின்றன என்று மாநில தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதனடிப்படையில் தமிழகத்தில் காலியாகவுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஜூலை மாதம் 9ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. அதனடிப்படையில், ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக இருக்கின்றன 2 மாவட்ட கவுன்சிலர், 20 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், 40 ஊராட்சி தலைவர்கள், 436 கிராம … Read more

பரபரப்பான சூழ்நிலையில் இன்று நடக்கிறது அதிமுகவின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்! எடுக்கப்போகும் முடிவு என்ன?

சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று முன்னரே தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக தலைமைக் கழக நிர்வாகிகள் கேட்டுக் கொண்டதற்கிணங்க ஜூன் மாதம் 27ஆம் தேதி திங்கள்கிழமை காலை 10 மணியளவில் தலைமை கழகம் எம்ஜிஆர் மாளிகை கூட்ட அரங்கில் தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெறவிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த கூட்டத்தில் தலைமை கழக … Read more

ஆளுங்கட்சியை கண்டித்து 9ம் தேதி மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம்! அதிமுக தலைமை கூட்டாக வெளியிட்ட அறிவிப்பு!

அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் பதவிக்கு மறுபடியும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் இணைந்து வெளியிட்ட ஒரு அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது, தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்று ஆறு மாதங்களுக்கு மேல் ஆகி விட்ட சூழ்நிலையிலும், தேர்தல் சமயத்தில் பொது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் பொதுமக்களின் அன்றாட தேவைகளையும், அவர்கள் எதிர்கொள்ளும் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காண்பதிலும் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு சிறிதும் அக்கறை காட்டாமல் ஆட்சி நடந்து கொண்டு இருப்பதை அதிமுக வன்மையாக … Read more

மீண்டும் பதவி ஏற்கும் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ்! முறைப்படி இன்று வெளியாகும் அறிவிப்பு!

அதிமுக கட்சி விதிகளின்படி ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை உட்கட்சி தேர்தலை நடத்த வேண்டும் இந்த வகையில் கடந்த 2014ஆம் வருடம் ஜெயலலிதா அதிமுக உட்கட்சி தேர்தலை நடத்தினார். அவருடைய மறைவுக்குப் பிறகு கடந்த 2019 ஆம் வருடம் அதிமுக உட்கட்சி தேர்தல் நடந்திருக்க வேண்டும், ஆனால் நோய் பரவல் காரணமாக, உட்கட்சி தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. இந்த சூழ்நிலையில், அதிமுகவின் உட்கட்சித் தேர்தல் வருகிற 13-ஆம் தேதி முதல் 23ம் தேதி வரை நடைபெற இருக்கிறது ஒருங்கிணைப்பாளர் … Read more