துணை அதிபர் சென்ற கார் வெடி விபத்தா?

காபூலில் பாதுகாப்பு வாகன அணிவகுப்புடன் சென்ற ஆப்கானிஸ்தான் நாட்டின் முதல் துணை அதிபரான அம்ருல்லா சலே அவர் சென்ற வாகனத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இந்த பயங்கர வெடி விபத்தில் வாகனங்கள் தூக்கி வீசப்பட்டன. துணை அதிபர் அம்ருல்லா சலே லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இந்த தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தனர். துணை அதிபரின் பாதுகாவலர்கள் உள்ளிட்ட பலர் பலத்த காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்க உடனடியாக எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஆப்கன் துணை அதிபர் … Read more

பெய்ரூட்டில் ஏற்பட்ட  வெடிவிபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் ஏற்பட்ட  வெடிவிபத்தில் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமானது. துறைமுகப்பகுதியே நிலைகுலைந்தது. 3 லட்சம் பேர் வீடுகளை இழந்தனர். வெடிவிபத்தில் ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்தனர். பலர் உயிரிழந்தனர். மீட்பு பணியில் ராணுவம் களமிறக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், வெடிவிபத்து நடைபெற்று கிட்டத்தட்ட 1 மாதம் நிறைவடைய உள்ள நிலையில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மீட்பு பணியின் போது மேலும் சில உடல்கள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதனால் பெய்ரூட் வெடிவிபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 188 ஆக அதிகரித்துள்ளது. ஆனாலும் இந்த விபத்தில் … Read more

இந்த வெடிவிபத்து மிகவும் மோசமானது

லெபனான் நாட்டின் பெய்ரூட் துறைமுகத்தில் நடந்த வெடிவிபத்து மிகவும் மோசமானது. இந்த வெடிவிபத்தானது துறைமுகத்தில் உள்ள கப்பலில் தீப்பற்றியதன் மூலம் அங்கு இருந்த அம்மோனியம் நைட்ரேட் வெடித்து ஏற்ப்பட்டது. இந்த ரசாயணம் விவசாய உரம் தயாரிக்கவும் வெடிமருந்து தயாரிக்கவும்  பயன்படுத்தப்படுகிறது. மேலும் இந்த வெடி விபத்தினால் 100க்கும் மேற்பட்டோர் இறந்தனர் 5000க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஏராளமானோர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். இந்த விபத்தானது 43 மீட்டர் பள்ளத்தை ஏற்படுத்தியதாக அதிகாரிகள் தெரிவிகின்றனர்.

வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும்

லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட்டில் உலகையே உலுக்கிய இந்த வெடி விபத்தில் 100 பேர் பலியானதாகவும் 4,000 பேர் படுகாயம் அடைந்ததாகவும் முதல் கட்ட தகவல்கள் தெரிவித்தன. நேற்றைய நிலவரப்படி பலி எண்ணிக்கை 149 ஆக அதிகரித்திருக்கிறது. பெய்ரூட் வெடி விபத்து தொடர்பாக சுதந்திரமான மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் லெபனான் அரசுக்கு அழைப்பு விடுத்துள்ளது. ஆணையத்தின் செய்தி தொடர்பாளர் ரூபர்ட் கொல்வில்  பெய்ரூட் வெடிவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குரல்கள் கேட்கப்பட … Read more

மனித வரலாற்றில் மிகப்பெரிய வெடிவிபத்து

மனித வரலாற்றில் அணுசக்தி இன்றி நடந்த மிகப்பெரிய வெடிவிபத்தாக பதிவு செய்யத்தக்க அளவில் லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட்டின் துறைமுக சரக்கு கிடங்கில் வைக்கப்பட்டிருந்த 2,750 டன் அமோனியம் நைட்ரேட்டால் கடந்த 4-ந் தேதி மாலை அதிபயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் அந்த துறைமுகம் உருக்குலைந்து சின்னாபின்னமானது. 135 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். 4 ஆயிரம் பேர் படுகாயம் அடைந்துள்ளனர். ஐரோப்பிய நாடுகள், ரஷியா, துனிசியா, துருக்கி, ஈரான், கத்தார் ஆகிய நாடுகள் நிவாரண … Read more

லெபனான் நாட்டில் கோர விபத்து

லெபனான் நாட்டின் தலைநகரான பெய்ரூட்டில் உள்ள துறைமுகம் ஒன்றில் பயங்கர சத்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டது. வெடிவிபத்து ஏற்பட்ட காரணமாக நெருப்பும் புகையுமாக வெளியேறியது. உடனே ஒரு வித வண்ணமாக காட்சியளித்தது இந்த விபத்தானது அந்த பகுதியில் மட்டும் இல்லாமல் அதை சுற்றியுள்ள தீவுகளிலும் தாக்கம் உணரப்பட்டது. தற்போதிய சூழ்நிலையில் 73 பேர் பரிதாபமாக இறந்துள்ளனர். 3000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மிகவும் ஆபத்தான  அமோனியம் நைட்ரேட் வேதிப்பொருளால் தான் இந்த கோரவிபத்து நடைபெற்றுள்ளதாக லெபனான் பிரதமர் ஹசன் டியப் … Read more