ஜேஇஇ தேர்வு – மாணவர்கள் கட்டணம் செலுத்துவதற்கான இறுதி நாள் இன்று!

ஜேஇஇ தேர்வு - மாணவர்கள் கட்டணம் செலுத்துவதற்கான இறுதி நாள் இன்று!

ஜேஇஇ முதல்நிலைத் தேர்வு எழுதும் மாணவர்கள் தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது. கட்டணம் செலுத்த வேண்டிய கால அவகாசம் இன்றுடன் முடிவடைய உள்ளது. மேலும் இந்த தேர்வு எழுதுவதற்கான ஹால் டிக்கெட் பிப்ரவரி மாதம் இரண்டாம் வாரத்திற்குள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மாணவர்கள் கூடுதல் தகவல்களை பெறுவதற்கு இணையதளத்தை அணுகும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஜேஇஇ முதல்நிலைத் தேர்வானது, நாடு முழுவதிலும் இருக்கும் ஐஐடி, என்ஐடி உள்பட அனைத்து மத்திய உயர்கல்வி நிறுவனத்திலும், … Read more

நிலப்பட்டா வழங்கும் திட்டம் – பிரதமர் மோடி துவக்கி வைத்தார்!

நிலப்பட்டா வழங்கும் திட்டம் - பிரதமர் மோடி துவக்கி வைத்தார்!

அசாம் மாநிலத்தில் ஒரு லட்சத்து 6 ஆயிரம் பேருக்கு நிலப்பட்டாக்களை வழங்கினார் பிரதமர் மோடி. அதாவது அம்மாநிலத்தில் நிலப்பட்டாக்களை வழங்கும் திட்டத்தை இன்று பிரதமர் மோடி துவக்கி வைத்தார். சிவசாகரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி அனைத்து பயனாளிகளுக்கும் நிலப்பட்டாக்களை வழங்கி சிறப்புரை ஆற்றியுள்ளார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி மக்களிடம் கூறியதாவது : “இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்து 70 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது, ஆனால் மக்கள் தங்களின் நிலப்பட்டாக்கள் இல்லாமல் … Read more

எல்லையில் சீனாவால் தொடரும் பதட்டம் – பாதுகாப்புதுறை அமைச்சர் திட்டவட்டம்!

எல்லையில் சீனாவால் தொடரும் பதட்டம் - பாதுகாப்புதுறை அமைச்சர் திட்டவட்டம்!

எல்லையில் சீனாவால் தொடர்ந்து பரபரப்பு நீடித்து வருகிறது. ஏனெனில் சீனா தனது படைகளை திரும்ப பெறாமல் இருப்பதால் அங்கு தற்போது பதட்டம் நிலவி வருகிறது. சீனா இவ்வாறு செய்வதால் இந்தியாவும் தனது படைகளை திரும்பப் பெறவில்லை. கல்வான் பள்ளத்தாக்கு பிரச்சினைகளை தொடர்ந்து இரு நாட்டு படைகளும் எல்லையில் குவிக்கப்பட்டன. பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. ஆனால் இரு நாடுகளும் தங்களின் படைகளை திரும்பப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். தற்போது பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆங்கில ஊடகத்திற்கு … Read more

கொரோனா தடுப்பூசி போடுவதில் சாதனை படைத்த இந்தியா!

கொரோனா தடுப்பூசி போடுவதில் சாதனை படைத்த இந்தியா!

தற்போது கொரோனா நோய்த்தொற்றை எதிர்த்து தயாரிக்கப்பட்ட தடுப்பூசியை அனைத்து நாடுகளிலும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே. தற்போது இந்தியாவிலும் கொரோனா தடுப்பு மருந்தை மக்களுக்கு செலுத்தி வருகின்றனர். இந்த கொரோனா தடுப்பு மருந்தை உபயோகிக்க ஆரம்பித்த முதல் 6 நாட்களில் மட்டும் 10 லட்சத்து 40 ஆயிரம் மக்களுக்கு இந்த கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதனால் இந்தியா தடுப்பூசி போடுவதில் அதிதீவிரமாக செயல்பட்டு கொண்டு வருகிறது. ஆனால் அமெரிக்காவில் 10 லட்சம் மக்களுக்கு … Read more

டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இந்திய அணி! ரகானேவிற்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பு!

டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இந்திய அணி! ரகானேவிற்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பு!

இளம் வீரர்களை கொண்ட இந்திய அணியை வைத்து ஆஸ்திரேலிய அணியை அதனுடைய சொந்த மண்ணிலேயே விழுத்திய ரகானேவிற்கு பிரம்மாண்டமான வரவேற்பு கிடைத்திருக்கிறது. ஆஸ்திரேலிய நாட்டில் சுற்றுப்பயணம் செய்த இந்திய கிரிக்கெட் அணி டி20 ,மற்றும் டெஸ்ட் தொடரை தன்வசப்படுத்தி அசத்தல் வெற்றியை பெற்றிருக்கிறது. இதனை தொடர்ந்து தற்சமயம் இந்திய அணி ஆனது இங்கிலாந்து கிரிக்கெட் அணியுடன் மோத தன்னை தயார் செய்து வருகிறது என்று தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலிய அணியுடன் அந்த நாட்டின் சொந்த மண்ணில் நான்கு போட்டிகள் … Read more

கொரோனா தடுப்பூசியை உபயோகிப்பதில் மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் – உலக நலவாழ்வு நிறுவனம் தகவல்!

கொரோனா தடுப்பூசியை உபயோகிப்பதில் மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - உலக நலவாழ்வு நிறுவனம் தகவல்!

கொரோனா நோய்த்தொற்று பரவலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இந்த கொரோனா வைரஸ்க்கு தடுப்பூசி அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது பல முக்கிய நாடுகளில் இந்த தடுப்பூசியானது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. நம் நாட்டிலும் அவசரகால பயன்பாட்டிற்கு இந்த கொரோனா தடுப்பூசியானது மக்கள் பயன் உபயோகத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இது குறித்து உலக நலவாழ்வு நிறுவனத்தின் உதவி இயக்குனராக பணிபுரியும் மரி ஏஞ்சலா சிமாவோ அவர்கள் செய்தியாளர்களை சந்தித்த போது கூறியதாவது: “இந்த கொரோனா தடுப்பூசியை … Read more

பயிற்சியில் இணைகிறது இந்தியா – பிரான்ஸ் விமானப்படை!

பயிற்சியில் இணைகிறது இந்தியா - பிரான்ஸ் விமானப்படை!

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த போர் விமானங்கள் இந்தியாவிற்கு வருகை தந்துள்ளது. அதாவது இந்தியா – பிரான்ஸ் ஆகிய இரண்டு நாட்டின் விமானப்படைகளும் இணைந்து 5 நாட்கள் பயிற்சியில் ஈடுபடுகின்றது. இந்தியாவின் ஜோத்பூர் என்கின்ற ஊரின் வடக்கு விமான படைத்தளத்தில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த அதிநவீன போர் விமானங்களான ரஃபேல் போன்ற விமானங்கள் தரையிறங்கியுள்ளது. மேலும் பிரான்ஸ் நாட்டிலிருந்து ரபேல் விமானங்களுடன் ஏ 330 மற்றும் ஏ 400 எம் போன்ற போர் விமானங்களும் இந்தியாவிற்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். … Read more

கடைசி போட்டி! வெற்றி பெறுமா இந்திய அணி!

கடைசி போட்டி! வெற்றி பெறுமா இந்திய அணி!

328 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்சை ஆரம்பித்த இந்திய அணி, விக்கெட் எதுவும் கேட்காமல் 4 ரன்கள் எடுத்த நிலையில் மழை வந்த காரணத்தால் நேற்றைய தின ஆட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. கடைசி நாளான இன்றைய தினமும் மழை இருக்கும் காரணத்தால் ,இந்திய அணி வெற்றி அடையுமா என்பது கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா கிரிக்கெட் அணிகள் மோதும் நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியா பிரிஸ்பேன் நகரில் … Read more

டெஸ்ட் போட்டிகளில் மீண்டும் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க போகிறாரா ரோஹித் ஷர்மா?!

டெஸ்ட் போட்டிகளில் மீண்டும் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க போகிறாரா ரோஹித் ஷர்மா?!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி நாளை நடக்கவுள்ளது. இந்த போட்டியில் விளையாடும் பதினொரு வீரர்களின் பெயர் பட்டியலையும் வெளியிட்டது பிசிசிஐ. வீரர்கள் விவரம்: 1. ரஹானே(கேப்டன்) 2. ரோஹித்(துணை கேப்டன்) 3. கில் 4. புஜாரா 5. விஹாரி 6. பன்ட் 7. ஜடேஜா 8. அஸ்வின் 9. பும்ரா 10. சிராஜ் 11. சைனி இதில் சைனி டெஸ்ட்டில் முதன்முதலாக அறிமுக வீரராக விளையாட இருக்கிறார். காயம் காரணமாக ராகுல் விளையாடவில்லை. காயம் காரணமாக … Read more

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் நடராஜன் அறிமுகம்?!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் நடராஜன் அறிமுகம்?!

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு நாள் மற்றும் டி20 தொடர் முடிந்த நிலையில், தற்பொழுது டெஸ்ட் தொடர் விளையாடி வருகின்றது. இதில், ஒருநாள் தொடரை ஆஸ்திரேலிய அணியும், டி20 தொடரை இந்திய அணியும் வென்றன. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியை ஆஸ்திரேலிய அணியும், இரண்டாவது போட்டியை இந்திய அணியும் வென்றது. மூன்றாவது போட்டி நாளை தொடங்கவுள்ளது. இதில், வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற இரு அணிகளும் மும்முரமாக உள்ளன. … Read more