ஐபிஎல் கிரிக்கெட் போட்டி! 13 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூருவிடம் விழுந்தது சென்னை அணி!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று புனேயில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னை அணி மற்றும் பெங்களூரு அணிகள் சந்தித்தனர். முதலில் விளையாடிய பெங்களூர் அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 273 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக மஹிபால் லாம்ரர் 42 ரன்களை சேர்த்தார். டுப்லஸ்ஸிஸ் 38 ரன்களையும், விராட்கோலி 30 ரன்களையும் சேர்த்தனர். இதனைத்தொடர்ந்து 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட், தேவன் கான்வே, உள்ளிட்ட இருவரும் … Read more

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி! அறிமுக அணியான லக்னோவை பந்தாடுமா பஞ்சாப் அணி?

15வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி சென்ற மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் பஞ்சாப் கிங்ஸ் அணி இதுவரையில் 8 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி 4 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்றிருக்கிறது. அந்த ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் இன்று நடைபெறவிருக்கும் லக்னோவிற்கு எதிரான போட்டியில் கூடுதல் நம்பிக்கையுடன் களமிறங்குவார்கள் என்று தெரிகிறது. அந்த ஆட்டத்தில் ஷிகர் தவான் 88 ரன்கள் … Read more

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி! ராஜஸ்தானிடம் போராடி விழுந்த டெல்லி அணி!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் ஆரம்பமாகி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ஐபிஎல் கோப்பையை வெல்லப் போவது யார் என்ற பரபரப்பு தற்போது தொற்றிக்கொண்டது. தொடக்கத்தில் தொடர் தோல்விகளை சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்சமயம் அந்த தோல்விகளிலிருந்து மெல்ல, மெல்ல, மீண்டு இருந்துவருகிறது. சென்னை அணி விளையாடிய கடைசி ஆட்டத்தில் தோனி ஆடிய ருத்ர தாண்டவத்தால் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த நிலையில், நேற்றைய தினம் நடைபெற்ற 34வது லீக் … Read more

ஐபிஎல் போட்டியில் 150 விக்கெட்டுகளை கைப்பற்றிய 6வது இந்திய வீரர் யார்! அந்த சாதனையின் நாயகன்?

தற்போது நடந்து வரும் ஐபிஎல் சீசன் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்த ஐபிஎல் தொடரில் எப்படியும் கோப்பையை கைப்பற்றும் என நினைத்திருந்த சென்னை அணி தொடர்ந்து ஹாட்ரிக் தோல்விகளை சந்தித்து ரசிகர்களை ஏமாற்றியது. இந்த நிலையில், பெங்களூரு அணியை சந்தித்த மும்பை இந்தியன்ஸ் அணி தன்னுடைய முதல் போட்டியிலேயே தோல்வியை சந்தித்தது இதன் காரணமாக, ரசிகர்கள் பெரும் அதிர்ச்சிக்காளானார்கள். எப்போதுமே சென்னை அணிக்கு அடுத்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளம் தமிழகத்தில் இருக்கிறது … Read more

ஐபிஎல் தொடரில் மோசமான சாதனை புரிந்த ஹைதராபாத் அணி!

ராஜஸ்தான் ராயல்ஸ் ஹைதராபாத் ஐபிஎல் தொடரின் 5வது ஆட்டம் நேற்றைய தினம் நடந்தது முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் சேர்த்தது. சஞ்சு சாம்சன் 55 ரன்களும், தேவ்தத் படிக்கல் 41 ரன்களும் சேர்த்தனர். அடுத்ததாக களமிறங்கிய ஹைதராபாத் அணி தொடக்கம் முதலே திணறியது கேன் வில்லியம்சன் 2 ரன்னில் வெளியேறினார். ராகுல் திரிபாதி, நிக்கலஸ் பூரன் உள்ளிட்டோர் டக்கவுட்டானார்கள். இதன் காரணமாக, பவர் பிளேவனா … Read more

இன்று ஆரம்பமாகிறது 15வது ஐபிஎல் திருவிழா! ரசிகர்கள் மகிழ்ச்சி வெற்றி பெறுமா சென்னை அணி?

15வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா மும்பையில் இன்று ஆரம்பமாகிறது. குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் உள்ளிட்ட மாநிலங்களில் அணி அறிமுகமாவதால் அணிகளின் எண்ணிக்கை 10 அதிகரித்திருக்கிறது. அதிக முறை ஐபிஎல் கோப்பையை வென்ற அணிகள், அதிக முறை இறுதிச்சுற்றுக்கு நுழைந்த அணிகள், என்ற அடிப்படையில் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்ற மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிடல், லக்னோ சூப்பர் ஜெயன்ட், உள்ளிட்டவை … Read more

ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல் வெளியிட்ட குஜராத் டைட்டன்ஸ் !!!

2022 ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் 26 ஆம் தேதி தொடங்கி மே 29 ஆம் தேதி வரை 65 நாட்கள் ரசிகர்களை மகிழ்விக்க தயாராக உள்ளது. இம்முறை லக்னோ மற்றும் குஜராத் என இரண்டு புதிய அணிகளுடன் சேர்த்து 10 அணிகள் பங்கேற்கின்றன. மொத்தம்  74 போட்டிகள் கொண்ட பிரம்மாண்டமான ஐபிஎல் தொடர் ஆனது கொரோனா வைரஸ் பரவலை முன்னிட்டு இந்தியாவின் மும்பை, புனே, அகமதாபாத் ஆகிய மூன்று முக்கிய நகரங்களில் மட்டும் நடைபெற … Read more

மார்ச் இறுதியில் தொடங்குகிறது ஐபிஎல் போட்டி! ரசிகர்கள் குதூகலம்!

கடந்த 2 ஆண்டு காலமாக ஐபிஎல் தொடர் நோய்த்தொற்று காரணமாக, துபாயில் நடைபெற்று வந்தது. அதோடு நோய் தொற்று கட்டுப்பாடுகள் காரணமாக, ரசிகர்களின்றி களையிழந்து போயிருந்தது இந்த ஐபிஎல் போட்டிகள். மேலும் சென்னை அணியின் மிக முக்கியத் தூணாக இருந்த சுரேஷ்ரெய்னா அவர்களை அந்த அணி இந்த ஆண்டிற்கான ஐபிஎல் ஏலத்தில் கைவிட்டது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதோடு சென்ற ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரை விவோ நிறுவனம் நடத்தியது. இந்த ஆண்டு முதல்முறையாக டாட்டா … Read more