திமுக – விசிக தொகுதி பங்கீடு.. “3+1” கிடைக்குமா?

திமுக – விசிக தொகுதி பங்கீடு.. “3+1″ கிடைக்குமா? திமுக மற்றும் விசிக வினரிடையே தொகுதி பங்கீடு குறித்த முதற்கட்ட பேச்சுவார்த்தை நடந்து முடிந்த நிலையில் விசிக மூன்று தனித் தொகுதிகளையும் ஒரு பொதுத் தொகுதியையும் கேட்டுள்ளது. கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலிலும், 2021 சட்டமன்ற தேர்தலிலும் திமுகவுடன் தொடர்ந்து கூட்டணி அமைத்து வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தற்போது 2024 நாடாளுமன்ற தேர்தலிலும் கூட்டணி குறித்து தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. கடந்த இரண்டு … Read more

தமிழக அரசியலில் தொடர் பரபரப்பு!! முக்கிய நிர்வாகி கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்!!

தமிழக அரசியலில் தொடர் பரபரப்பு!! முக்கிய நிர்வாகி கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்!! மதிமுக மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் மார்க்கோனி கட்சியின் விதிமுறைகளுக்கு புறம்பாக நடந்து கொண்டதால் அவரை கட்சியிலிருந்து நீக்குவதாக வைகோ தற்பொழுது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, ஒழுங்கு நடவடிக்கை   தலைமைக் கழக அறிவிப்பு   மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் இ.மார்கோனி அவர்கள் கழகக் கட்டுப்பாட்டை மீறிச் செயல்படுவதால், மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கி வைக்கப்படுகிறார். … Read more

மதிமுகவின் சொத்து பட்டியலை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டிய அவசியம் இல்லை – வைகோ பேட்டி!

மதிமுகவின் சொத்து பட்டியலை வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டிய அவசியம் இல்லை என அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். மதிமுக வின் 30 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ கட்சியின் தலைமை அலுவலகமான தாயகத்தில் பட்டாசு வெடித்து கொடி ஏற்றி இனிப்புகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மதிமுக வின் 30 ஆம் ஆண்டு தொடக்க விழாவை தொண்டர்கள் தங்கள் குடும்ப விழாவாக தமிழகம் முழுவதும் கொண்டாடி வருகிறார்கள் என … Read more

மதிமுகவை திமுகவில் இணைக்க வேண்டும்: திருப்பூரில் மதிமுக அவைத்தலைவர் துரைசாமி பேட்டி!

மதிமுகவை திமுகவில் இணைக்க வேண்டும் என்று கூறியதற்கு காரணம் வைகோவின் துடிப்பு மிக்க பேச்சை நம்பி ஏராளமான இளைஞர்கள் மதிமுகவில் சேர்ந்ததாகவும் ஆனால் தற்போது பொதுச்செயலாளரின் நடவடிக்கையால் அங்கீகாரம் ரத்து ஆகும் நிலை சென்றது வேதனை அளிப்பதாகவும் இதனை காப்பாற்றவே திமுகவை இணைக்க வலியுறுத்தினேன். தனது கடிதம் புறக்கணிக்கப்படுவதாக வைகோ தெரிவித்துள்ளார். கடிதத்தில் கட்சியின் விதிமுறைகள் குறித்து கேட்ட கேள்விகளுக்கு நேரடியாக பதில் சொல்ல முடியாததால் புறக்கணித்துள்ளார். தமிழகம் முழுவதும் 45 இடங்களில் சொந்தமான சொத்துக்கள் உள்ளது. … Read more

துரைசாமியை கண்டிப்பாக நீக்க வேண்டும்!! செஞ்சி ஏ.கே மணி வைகோவிற்கு கடிதம்!!

Duraisamy must be removed!! Letter to Senji AK Mani Vaiko!!

துரைசாமியை கண்டிப்பாக நீக்க வேண்டும்!! செஞ்சி ஏ.கே மணி வைகோவிற்கு கடிதம்!! திருப்பூர் துரைசாமி அவர்களை கட்சியிலிருந்து கண்டீப்பாக நீக்க வேண்டும் என்று செஞ்சி ஏ.கே மணி அவர்கள் மதிமுக கட்சி தலைவர் திரு. வைகோ அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. மதிமுக கட்சியை திமுக கட்சியுடன் இணைத்து விடலாம் என்று மதிமுக பொதுச் செயலாளர் திருப்பூர் துரைசாமி அவர்கள் மதிமுக கட்சியின் தலைவர் வைகோ அவர்களுக்கு சில நாட்களுக்கு முன்னர் கடிதம் எழுதினார். … Read more

இரண்டு ஆண்டுகளாக கட்சிக்கு வராதவர் இப்போது பேசினால் அது நல்ல நோக்கத்துடன் இருக்காது – திருப்பூர் துரைசாமி அறிக்கைக்கு வைகோ பதில்!

இரண்டு வருடமாக கட்சிக்கு வராதவர் தற்போது பேசினால் அது நல்ல நோக்கத்தோடு இருக்காது. கட்சியில் 99.9% வைகோ உடன் உள்ளனர். இந்த இயக்கம் பல கஷ்டங்களைக் கடந்து வந்திருக்கிறது இதையும் கடந்து செல்வோம் என திருப்பூர் துரைசாமி கடிதத்திற்கு வைகோ பதில் அளித்துள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமான தாயாகத்தில் மே 1 தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு மறுமலர்ச்சி தொழிலாளர்கள் சார்பில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கொடி ஏற்றி தொழிலாளர்களுக்கு இனிப்புகளை வழங்கினார். பின்னர் … Read more

மதிமுக தனி நபர் வைகோ மற்றும் அவரது குடும்பத்தினருக்காக போராடும் இயக்கம் அல்ல!! தமிழக நலனுக்காக பாடுபடும் இயக்கம்!

மதிமுக தனிப்பட்ட வைகோ விற்கும் அவருடைய குடும்பத்திற்கும் பாடுபடும் இயக்கமல்ல ; தமிழ்நாட்டின் நலனுக்காக பாடுபடும் இயக்கம். மதிமுகவை திமுகவுடன் இணைக்க வேண்டும் என்ற துரைசாமியின் கடிதத்தை மதிமுக அலட்சியப்படுத்தி வருகிறது. மே 1 தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு மறுமலர்ச்சி தொழிலாளர்கள் முன்னணி சார்பில் சென்னை எழும்பூரில் உள்ள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக தலைமை அலுவலகத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கொடி ஏற்றிய பின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர் ,மதிமுக முக்கிய … Read more

மதிமுக அனைவரும் வைகோ பின்பு தான்!! துரைசாமியை எதிர்க்கும் மாவட்ட செயலாளர்!!

மதிமுக அனைவரும் வைகோ பின்பு தான்!! துரைசாமியை எதிர்க்கும் மாவட்ட செயலாளர்!! திமுக கூட்டனியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட முதலில் எதிர்ப்பு தெரிவித்தவர் தலைவர் துரைசாமி,தற்போது திமுக கூட்டணியில் இணைக்க அறிவுறுத்துகிறார். மதிமுகவில் போலி உறுப்பினர் என குறிப்பிடுவது தவறானது. அவமரியாதை செய்வது வருத்தமளிக்கிறது. அவரது வார்டிலேயே எத்தனை உறுப்பினர் என அவருக்கு தெரியாது. அவைத் தலைவர் துரைசாமிக்கு பின்னால் யாரும் இல்லை . இது தொடர்பாக காலையில் பொதுச் செயலாளர் வைகோவுடன் தொலைபேசியில் பேசினேன் வைகோ … Read more

ஆர் எஸ் எஸ் அமைப்பை தமிழக அரசும் திமுகவின் கூட்டணி கட்சிகளும் எதிர்ப்பதின் உள்நோக்கம் என்ன?

வரும் அக்டோபர் 2ம் தேதி காந்தியடிகளின் பிறந்த நாளில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஊர்வலத்திற்கு தமிழக அரசு தடை விதித்திருக்கிறது. அந்த அமைப்பு அரசியல் கட்சி அல்ல அதற்கு மதவாத இயக்கம் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அதன் மீது அரசுக்கு எழும் பயத்தில் நியாயம் உள்ளது. ஆனால் விடுதலை சிறுத்தைகள் கட்சியும், இடதுசாரி கட்சிகளும் ஒன்றிணைந்து சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக அதே நாளில் நடத்தவிருந்த மனித சங்கிலி போராட்டத்திற்குத் தடை விதித்திருப்பது எந்த வகையில் … Read more

திருமாவளவன் மூலமாக ஆர் எஸ் எஸ் அமைப்பை எதிர்க்கிறார்களா சிறுபான்மையினர?

திருமாவளவனின் மணிவிழா பொதுக்கூட்டம் மதுரையில் நடைபெற்றது. இதில் அமைச்சர் மூர்த்தி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெங்கடேசன், நவாஸ் கனி, மேயர் இந்திராணி, சட்டசபை உறுப்பினர் பூமிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வைகோ பேசும்போது தேசிய இனங்களின் தனித்தன்மையை ஒழித்து விட்டு இந்தியா என்ற பெயரில் இந்தியை வைத்து ஆட்சி நடத்த நினைக்கிறார்கள் என்று கூறினார். ஆனால் எப்போதுமே காங்கிரஸ், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு பாஜக … Read more