பள்ளி-கல்லூரிகள் ஆகஸ்டு 31-ந்தேதி வரை மூடல்

கர்நாடக மாநிலத்தில் இன்று 2-ம் கட்ட ஊரடங்கு முடிவடைகிறது.  அடுத்த கட்ட ஊரடங்கு தளர்வு குறித்த மத்திய அரசு நேற்று முன்தினம் வழிகாட்டு  முறைகளை  வெளியிட்டது. அந்த அடிபடையில் தலைமை செயலாளர் விஜயபாஸ்கர், 3-ம் கட்ட ஊரடங்கு தளர்வு குறித்த வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளார். அதில் கர்நாடகத்தில் பள்ளி, கல்லூரிகள் வருகிற ஆகஸ்டு மாதம் 31-ந் தேதி வரை மூடப்படும். அதே வேளையில் ஆன்லைன் மூலம் பாடம்  கற்பதற்கு எந்த வித தடையும் இல்லை. திரையரங்கு, நீச்சல் குளங்கள்,  பூங்காக்கள், … Read more

பக்ரீத் பண்டிகைக்கு விலங்குகளை பலியிட உயர்நீதிமன்றம் தடை!!

பக்ரீத் பண்டிகைக்கு விலங்குகளை பலியிட உயர்நீதிமன்றம் தடை   மதுரை வட இந்தியர் சார்பாக அதன் தலைவர் ஹூக்கம் சிங்என்பவர், வரும் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி பக்ரீத் கொண்டாடப்பட உள்ள நிலையில் உள்ள விலங்குகளை பொது இடங்களில் ஆடு மாடு போன்ற விலங்குகளை பலியிட தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.   அதில் அவர் கூறியதாவது இறைச்சி கடைகளிலும் பொது இடங்களிலும் அதிகமான விலங்குகள் கொண்டுவரப்பட்டு சட்டவிரோதமாக கொல்லப்படுகிறது. ஒரே வரைமுறை இல்லாமல் … Read more

செமஸ்டர் தேர்வு ரத்து செய்யும் திட்டமில்லை

இறுதியாண்டு  செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்யக் கோரி மாணவர்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், பல்கலைக்கழக மானியக் குழு தனது பதிலை பிரமாணப்பத்திரமாக இன்று தாக்கல் செய்தது. அதில் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்தால் மாணவர்களின் எதிர்காலம்  பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்று யுஜிசி தரப்பு விளக்கம் தரப்பட்டது. பல்கலைக்கழக இறுதியாண்டு, செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்வதை குறித்து எந்த திட்டமும் இல்லை எனவும் இறுதி செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்தால் சரிசெய்ய முடியாத பாதிப்பை ஏற்படுத்தும் … Read more

அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி விலை குறிப்பு

டெல்லியில் 30 சதவீதம் என்ற அளவுக்கு வாட் வரி விதிக்கிறது. . இந்த நிலையில்  டெல்லியில் டீசல் மீதான வாட் வரியை 30%ல் இருந்து 16.75% ஆக குறைத்து அம்மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி உத்தரவிட்டுள்ளார். டெல்லியில் வாட் வரி ஏறத்தாழ பாதியாக குறைத்து விட்டதால், டீசல் விலை ஒரு லிட்டருக்கு 8 ரூபாய் 36 காசுகள் என்ற அளவுக்கு குறைந்து விடும். 82 ரூபாய் என்ற அளவுக்கு ஒரு லிட்டர் டீசல் டெல்லியில் விற்பனையாகியது. … Read more

பங்களாவை காலி செய்தார் பிரியங்கா காந்தி

சிறப்பு பாதுகாப்பு படையின் பரிந்துரைப்படி, 1997ல் பிரியங்காவுக்கு, டெல்லியில், லோதி எஸ்டேட் பங்களா ஒதுக்கப்பட்டது. இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கபட்டவர்களுக்கு எஸ்பிஜி பாதுகாப்புக்கான இடத்தில் தங்க அனுமதிக்க இயலாது. எனவே ஜூலை 31க்குள் பங்களாவை காலி செய்யுமாறும், வாடகை நிலுவை, ரூ.3.26 லட்சத்தை செலுத்துமாறும், மத்திய உள்துறை அமைச்சகம், பிரியங்காவுக்கு நோட்டீஸ் அனுப்பியது. பிரியங்கா காந்தி டெல்லியில் உள்ள லோதி எஸ்டேட் பங்களாவை  காலி செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டெல்லியின் சுஜன் சிங் பூங்கா அருகில் உள்ள … Read more

புதிய தளர்வுகளுடன் அடுத்த கட்ட ஊரடங்கு

ஊரடங்கில்  மாதந்தோறும் புதிய தளர்வுகளை மத்திய அரசு அறிவித்து வருகிறது. தற்போதைய ஊரடங்கு, வெள்ளிக்கிழமை முடிவடைகிறது. எனவே, ஆகஸ்டு 1-ந் தேதி முதல் 31-ந் தேதிவரை அமல்படுத்தப்பட உள்ள மூன்றாம் கட்ட தளர்வுகளை மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று அறிவித்தது. அதில்  இரவு நேரங்களில் தனிநபர் நடமாட்டத்துக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடு நீக்கப்படுகிறது. அதாவது, இரவு நேர ஊரடங்கு இனிமேல் கிடையாது. சினிமா தியேட்டர்கள், நீச்சல் குளங்கள், கேளிக்கை பூங்காக்கள், நாடக அரங்குகள், மதுபான விடுதிகள், ஆடிட்டோரியம், கூட்ட அரங்குகள். சமூகம், … Read more

பக்தர்கள் அயோத்திக்கு வர வேண்டாம்

ராமர் கோவில்  பூமி பூஜை நடைபெறும் நிகழ்ச்சியை நேரில் காண பக்தர்கள் அயோத்திக்கு வர வேண்டாம் என ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுதொடர்பாக அறக்கட்டளை சார்பில் 1984-ம் ஆண்டு முறைப்படி தொடங்கப்பட்ட ராமர் கோவில் கட்டுமானப் பணிக்கான இயக்கத்திற்கு கோடிக்கணக்கான ராமர் பக்தர்களிடம் இருந்து பேராதரவு கிடைத்தது. தற்போது நடைபெறும் பூமி பூஜை வரலாற்றுச் சிறப்புமிக்க புனித நிகழ்ச்சியில் நேரில் கலந்துகொள்ள வேண்டும் என்பது அனைவருக்கும் ஏற்படும் விருப்பமாகும். கொரோனா தொற்று பரவலால் … Read more

சோனியா காந்தி ஆலோசனை கூட்டம்

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவரான சோனியா காந்தி ராஜ்யசபா எம்.பி.க்களுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார். சோனியா காந்தி காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக இருந்து வருகிறார். மத்திய பிரதேசத்தை தொடர்ந்து, ராஜஸ்தான் மாநிலத்திலும் காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் ராஜ்யசபா எம்.பி.க்கள் கூட்டம் வீடியோ கான்பரன்சிங் மூலம் நடக்கிறது. தற்போதைய அரசியல் சூழ்நிலை, கொரோனா தாக்கம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தவுள்ளார். ஏற்கனவே, கடந்த 11-ம் தேதி காங்கிரஸ் … Read more

ஆகஸ்டு 31-ம் தேதி வரை ஊரடங்கு

நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மகாராஷ்டிராவில் ஊரடங்கை ஆகஸ்டு 31-ம் தேதி வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது. அத்துடன், புதிய வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது. அதில், திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகளில் 50 பேருக்கு மேலும், இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகளில் 20 பேருக்கு மேலும் பங்கேற்கக் கூடாது. ஆகஸ்டு 5 முதல் ஷாப்பிங் மால்கள், வணிக வளாகங்கள் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட அனுமதி அளித்துள்ளது. அனைவரும் கட்டாயம் … Read more

குழப்பத்தில் உள்ள பாஜக

சிவசேனாவுடன் கூட்டணி சேர எந்த திட்டமும் இல்லை என்று எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.  பா.ஜ.க. தலைவர்களின் இந்த முரண்பட்ட கருத்துகள் குறித்து சிவசேனா விமர்சித்துள்ளது. இதுதொடர்பாக, அக்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவின் தலையங்கத்தில் உங்கள் அரசியல் விளையாட்டை மகாராஷ்டிராவில் விளையாட முடியாது. எனவே மாநிலத்தில் உங்களது ஆட்சியை பற்றி ஆசைப்படவும் முடியாது. ஜே.பி.நட்டா மாநில பா.ஜ.க. சொந்த பலத்தில் இருக்க வேண்டும் என்று கூறுகிறார். மாநில நன்மைக்காக சிவசேனாவுடன் கைகோர்க்க பா.ஜ.க. தயாராக உள்ளது … Read more