ஆளுநரின் வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் இன்று டெல்லி செல்லும் ஆளுநர்! நடுக்கத்தில் ஆளும் தரப்பு!

சமீபத்தில் தமிழக ஆளுநரின் வாகனம் மற்றும் அவருடைய பாதுகாப்பு வாகனங்கள் மீது கருப்புக்கொடி மற்றும் கற்கள் உள்ளிட்டவற்றை கொண்டு மர்ம நபர்களால் தாக்குதல் நடத்தப்பட்டது. இது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது . இதில் யோசிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் ஆளுங்கட்சியான திமுக சார்பாக நீட்தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு வழங்க வேண்டும் என்று தொடர்ந்து ஆளுநரிடம் வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனாலும் அந்த வலியுறுத்தலை ஆளுநர் பெரிதாக கருதவில்லை என்று சொல்லப்படுகிறது. மேலும் இதன் காரணமாக, ஆளும் … Read more

இன்று ஆளுநரை சந்திக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்! முதல்வரின் கோரிக்கையை ஏற்பாரா ஆளுநர்?

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழக சட்டசபையில் இந்த நீட் தேர்வுக்கு எதிராக கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அந்த தீர்மானம் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் ஆளுநரால் கவனிக்கப்படாமல் தொடர்ந்து அந்த மசோதா கிடப்பில் போடப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த மசோதாவிற்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என்று பலமுறை மாநில அரசு சார்பாக அவரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனாலும் அவரிடமிருந்து எந்த விதமான சம்மதமும் வரவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் … Read more

காந்தியடிகளின் 75 வது நினைவு தினம்! அஞ்சலி செலுத்த வந்த ஆளுநருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

மகாத்மா காந்தியின் 75வது நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று சென்னை மெரினா கடற்கரையில் இருக்கின்ற அவருடைய திருவுருவச் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த காந்தியடிகளின் திருவுருவப் படத்திற்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி மரியாதை செலுத்தினார். இதற்காக மெரினா கடற்கரைக்கு வந்த அவர் காரில் இருந்து இறங்கி சென்ற சமயத்தில் வாழ்க, வாழ்க, திராவிடம் வாழ்க, திராவிட நாடு வாழ்க, என்ற பாடல் பாடப்பட்டது. இந்த பாடலை சர்வதேச இசை சங்கம் குழுவினர் மற்றும் பள்ளி மாணவிகள் உள்ளிட்டோர் … Read more

கவர்னரிடம் புகார் மனுவை வழங்கிய பாஜக! நடவடிக்கை எடுக்கப்படுமா?

தமிழக அரசை விமர்சனம் செய்து சமூகவலைதளத்தில் கருத்துப்பதிவிட்டதாக தெரிவித்து பாஜக நிர்வாகிகள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இதனை கண்டிக்கும் விதத்தில் சென்னை தியாகராய நகரில் இருக்கின்ற பாஜக அலுவலகமான கமலாலயத்தில் கட்சியின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப் பிரிவு சார்பாக மவுன போராட்டம் நடைபெற்றது. அந்தப் பிரிவின் தலைவர் நிர்மல்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த மௌன போராட்டத்தில் பாஜகவின் துணைத் தலைவர் எம் எம் ராஜா, வி பி துரைசாமி, சென்னை மண்டல தேர்தல் … Read more

இன்று தமிழக ஆளுநரை சந்திக்கும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி.!!

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிச்சாமி இன்று காலை 11 மணிக்கு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்கிறார். தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே.பழனிச்சாமி இன்று காலை 11 மணிக்கு கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநரை சந்திக்க உள்ளார். தமிழகத்தின் பல்வேறு நிகழ்வுகள் குறித்த கோரிக்கை மனுவை வழங்குகிறார். அதில் குறிப்பாக, சமீபத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தல் … Read more

“ஈஷா யோகா மையம் ” சத்குருவை சந்தித்த தமிழக ஆளுநர் ரவி.!!

தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்ற பிறகு முதல் முறையாக 5 நாள் சுற்றுப்பயணமாக கடந்த 16ம் தேதி உதகைக்கு சென்றார். முக்கூர்த்தி தேசிய பூங்காவை குடும்பத்துடன் சென்று பார்வையிட்ட அவர், நூற்றாண்டு பாரம்பரியமிக்க நீலகிரி மலை ரயிலில் குடும்பத்துடன் பயணம் செய்தார். அதனைத் தொடர்ந்து, புகழ்பெற்ற உதகை அரசு தாவரவியல் பூங்காவில் நீலகிரி மண்ணின் பாரம்பரிய மரமான விக்கி மரம் அழிந்துவரும் பட்டியலில் உள்ளது. தற்போது விக்கி மரம் கன்றுகளை நடவு செய்து சுற்றுச்சூழலை பாதுகாப்பது … Read more