100 மீட்டர் அளவு ராமேஸ்வரம் கடல் உள்வாங்கியது! இது என்ன சுனாமி எச்சரிக்கையா!?

100 meters of Rameswaram sea absorbed! What is this Tsunami Warning!?

100 மீட்டர் அளவு ராமேஸ்வரம் கடல் உள்வாங்கியது! இது என்ன சுனாமி எச்சரிக்கையா!? ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோயிலானது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் ஒரு புனித தலமாகும். இந்தியாவில் உள்ள 12 ஜோதி லிங்க தலங்களோடு இந்த கோவிலும் ஒன்றாக கருதப்படுகின்றது. இந்த பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் ஏராளமான பக்தர்கள் அங்குள்ள அக்னி தீர்த்த லிங்க கடலில் நீராடி விட்டு செல்வது வழக்கம். மேலும் கோவிலின் சுற்றுப்புறத்தில் 22 வகையான புனித தீர்த்தங்களும் அமைந்திருக்கும். … Read more

இந்த மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்வதற்கு தடை! மீன்வளத்துறை பிறப்பித்த திடீர் உத்தரவு! 

இந்த மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்வதற்கு தடை! மீன்வளத்துறை பிறப்பித்த திடீர் உத்தரவு!  விசைப்படகு மீனவர்கள் மற்றும் பிற நாட்டுப் படகு மீனவர்கள் இன்று ஒரு நாள் மட்டும் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கை அருகே தென்மேற்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. இது காரைக்காலுக்கு தென்மேற்கு 650 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இதனால் தமிழகத்தில்  தென் மாவட்டங்களில் 3 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை மையம் … Read more

ராமேஸ்வரம் அருகே கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட மீனவப் பெண்! வாலிபர்கள் மருத்துவமனையில் சிகிச்சை!

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே வடகாடு பகுதியைச் சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் நேற்று முன்தினம் கடல்பாசி சேகரிப்பதற்காக சென்றார். மாலைவரை அவர் வீடு திரும்பாததால் அந்த பெண்ணை அவருடைய குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தீவிரமாக தேடி வந்தனர். அத்துடன் அந்தப் பெண் காணாமல் போனது தொடர்பாக ராமேஸ்வரம் காவல் நிலையத்தில் புகார் மனுவும் வழங்கப்பட்டது. இந்த சூழ்நிலையில், அந்த பெண் அதே பகுதியில் கடற்கரையை ஒட்டிய இடத்தில் முள் புதரில் ஆடைகள் கலைந்த … Read more

அச்சத்தில் ராமேஸ்வர மீனவர்கள்…கலர் மாறிய கடல்..!!!

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் அருகே உள்ள பாம்பன் கடல் பகுதியில் ‘பூங்கோரை’ எனப்படும் ஒருவகை பாசியால் கடல் நீரின் நிறம் நீல நிறத்திலிருந்து பச்சை நிறமாக மாறிவிட்டது. இந்த திடீர் நிற மாற்றத்தின் காரணமாக சிறிய ரக மீன்கள் உயிரிழக்கும் அபாயம் எதுவும் நேரக்கூடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பாம்பன் முதல் வேதாளை வரை பச்சை நிறப் பூங்கோரைப் பாசிகள் நீரின் மூலம் அடித்து வரப்பட்டு கரை ஒதுங்கத் தொடங்கின. இதையடுத்து … Read more

தீபாவளி பண்டிகை! மேலும் 8 சிறப்பு ரயில்கள் இயக்கம்! முழு விவரம்!

தீபாவளி பண்டிகை நாட்களில் சொந்த ஊருக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்க்கவும் மேலும் 8 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஜாம்நகர் – திருநெல்வேலி, சிறப்பு ரயில் (09578), வாரம் 2 முறை ஜாம்நகரில் இருந்து நவ. 6ம் தேதி முதல் வெள்ளி, சனிக்கிழமைகளில் இரவு 9 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் ஞாயிறு, திங்கள்கிழமைகளில் திருநெல்வேலி செல்லும். திருநெல்வேலி – ஜாம்நகர், … Read more