இலங்கை வாழ்த்தமிழர்களுக்கு ஆர் எஸ் எஸ் தொண்டு நிறுவனம் செய்த உதவி!

பொருளாதார நெருக்கடி காரணமாக பாதிக்கப்பட்ட இலங்கையில் பத்தாயிரம் குடும்பங்களுக்கு ஆர்எஸ்எஸ் தொண்டு அமைப்பான சேவா இன்டர்நேஷனல் அரிசி போன்ற உணவுப் பொருட்களை வழங்கி உள்ளது. உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட இலங்கை கடந்த 2009 ஆம் ஆண்டுக்குப் பிறகு பொருளாதாரத்தில் மெல்ல, மெல்ல மீண்டு வந்தது. ஆனால் கடந்த 2020 ஆம் ஆண்டு நோய் தொற்று பாதிப்புகள் காரணமாக அந்த நாட்டின் நிலைமை மிகவும் மோசமானது. அத்யாவசிய உணவுப் பொருட்களின் விலை நடுத்தர மக்களால் கூட வாங்க முடியாத … Read more

இன்று மீண்டும் திறக்கப்படுகிறது இலங்கை அதிபர் அலுவலகம்!

பொருளாதார நெருக்கடியின் காரணமாக, கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் இலங்கை நாட்டில் அந்த நாட்டின் அரசாங்கத்தின் மீது மிகுந்த கோபமடைந்த பொதுமக்கள் கடந்த 9ம் தேதி மிகப் பெரிய புரட்சியில் ஈடுபட்டார்கள். அதிபர் மாளிகை அதிபர் அலுவலகம் பிரதமர் அலுவலகம் போன்ற அரசு கட்டிடங்களை சூறையாடி அங்கேயே சில நாட்கள் போராட்டக்காரர்கள் தங்கி இருந்தார்கள். அதன் பின்னர் அந்த கட்டிடங்களிலிருந்து படிப்படியாக போராட்டக்காரர்கள் வெளியேறிய பிறகு கூட போராட்டக்காரர்களில் ஒரு சிலர் அந்தப் பகுதியிலேயே தங்கி இருந்தார்கள். … Read more

இலங்கை வாழ் இந்தியர்களை எச்சரித்த இந்திய தூதரகம்!

இலங்கையில் விலைவாசி உயர்வு உணவு எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் பற்றாக்குறை முடித்தவற்றைத் தொடர்ந்து கடுமையான நெருக்கடி ஏற்பட்டது. இது பொதுமக்களை பெரிய துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது. நிதி நெருக்கடியின் காரணமாக, உணவும் மற்றும் மருந்து அதோடு எரிபொருள் உள்ளிட்ட இறக்குமதி செய்யவோ அல்லது வாங்கவோ முடியாத சூழ்நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டிருக்கிறது. சுதந்திரம் பெற்றதிலிருந்து இதுவரையில் இல்லாத வகையிலான எரிபொருள் பற்றாக்குறை காரணமாக, அந்த நாடு சிக்கி தவித்து வருகிறது. இந்த சூழ்நிலையில், இலங்கைக்கு இந்தியா ஆதரவு கரம் … Read more

இன்று நடைபெறுகிறது இலங்கை அதிபர் தேர்தல்! அடுத்த இடைக்கால அதிபர் யார்?

மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி சந்தித்து வருகின்ற நம்முடைய அண்டை நாடான இலங்கையில் மக்கள் போராட்டத்தை தொடர்ந்து அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே அந்த நாட்டை விட்டு வெளியேறி சிங்கப்பூரில் தஞ்சமடைந்திருக்கிறார். அவர் அங்கிருந்து தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்க பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த நிலையில், அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடைபெறவிருக்கிறது இதற்கான வேட்பு மனுத்தாக்கல் நேற்றைய தினம் நடந்தது. இதற்கு முன்பாக அதிபர் போட்டியிலிருந்து விலகுவதாக எதிர்க்கட்சித் … Read more

இலங்கை அதிபர் நாட்டை விட்டு தப்பிச்செல்ல இந்தியா உதவி புரிந்ததா? தூதரகம் அளித்த விளக்கம்!

நம்முடைய அண்டை நாடான இலங்கையில் ஏற்பட்டிருக்கின்ற பொருளாதார நெருக்கடியின் காரணமாக, பொதுமக்கள் பல சிக்கல்களை சந்தித்து வருகின்றன. அன்றாட தேவைப்படும் அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டுமளவிற்கு அதிகரித்திருப்பதால் அந்த நாட்டில் அரசுக்கு எதிராக போராட்டம் வலுப்பெற்று இருக்கிறது. அதோடு போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகையை முற்றுகையிட்டதால் அதிபர் மாளிகையிலிருந்து அந்த நாட்டின் அதிபர் கோத்தபய ராஜபக்சே தப்பியோடினார். இந்த நிலையில், அந்த நாட்டின் புதிய பிரதமராக பதவி ஏற்று கொண்ட ரனில் விக்ரமசிங்கே தன்னுடைய பதவியை ராஜினாமா … Read more

இலங்கையில் கொதித்தெழுந்த பொதுமக்கள்! அவசரநிலை பிரகடனம்!

இலங்கையில் நிலவிவரும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக அத்தியாவசிய பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. ஆகவே கொதித்தெழுந்த இலங்கை மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அதிபர் மாளிகையில் நுழைந்த அவர்கள் கடந்த சனிக்கிழமை முதல் அதிபர் மாளிகையை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறார்கள். இதனையடுத்து அனைத்து கட்சிகளும் இணைந்து ஆட்சி அமைக்கும் விதத்தில் இலங்கை அமைச்சரவை ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்திருக்கின்றன. இலங்கையில் வருகின்ற 20ஆம் தேதி புதிய அதிபரை தேர்வு செய்ய அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் … Read more

அதிபர் மாளிகையை கைப்பற்றிய போராட்டக்காரர்கள்! குடும்பத்துடன் மாலத்தீவுக்கு பறந்த இலங்கை அதிபர்!

நம்முடைய அண்டை நாடான இலங்கையில் பொருளாதார நெருக்கடி அதிகரித்து வருவதால் அங்கே பொது மக்களின் போராட்டம் அதிகரித்ததை தொடர்ந்து அதிபர் பதவியிலிருந்து கோத்தபய ராஜபக்சே விலக வேண்டும் என்று வலியுறுத்தி அவருடைய மாளிகையை முற்றுகையிட்டு போராட்டக்காரர்கள் கடந்த சனிக்கிழமை முதல் பெரும் போராட்டத்தை முன்னெடுத்து வருகிறார்கள். இதனையறிந்து கொண்டு அதற்கு முன்னதாகவே அதிபர் மாளிகையை விட்டு கோத்தபய ராஜபக்சே திடீரென்று வெளியேறினார். இதனைத் தொடர்ந்து அதிபர் பதவியிலிருந்து இன்றைய தினம் அவர் விலகுவதாக தெரிவித்திருந்தார். அதேபோல பிரதமர் … Read more

அரசு ஊழியர்களுக்கு ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்குவதற்கு கூட பணமில்லை! கடுமையான பஞ்சத்தை நோக்கி நகர்கிறதா இலங்கை

நம்முடைய அண்டை நாடான இலங்கை தற்போது கடுமையான நிதி நெருக்கடியையும் அரசியல் நெருக்கடியையும் சந்தித்து வருகிறது. இதன் காரணமாக, அங்கு அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் கடுமையான விலை உயர்வை சந்தித்து வருகின்றன. அன்றாட தேவைப்படும் எரிபொருளான பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட விலைகளும் கடுமையாக அதிகரித்திருக்கின்றன. இந்த நிலையில், அத்தியாவசியப் பொருட்களான காய்கறியின் விலை நிலவரங்கள் அதிகரித்ததால் அந்த நாட்டு மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக கடுமையான போராட்டத்தில் குதித்தார்கள். இந்த நெருக்கடியின் காரணமாக, பிரதமர் பதவியை வகித்து … Read more

இலங்கையின் கோரிக்கையை ஏற்றது இந்தியா! 65 ஆயிரம் மெட்ரிக் டன் யூரியாவை இலங்கைக்கு வழங்க ஒப்புதல்!

நம்முடைய அண்டை நாடான இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி இருக்கிறது. இதன் காரணமாக, அங்கே அத்தியாவசியப் பொருட்களின் விலை தாறுமாறாக எகிறி இருக்கிறது. இதன் காரணமாக, பொதுமக்கள் வெகுவாக பாதிப்பை சந்தித்து இருக்கிறார்கள், அதிலும் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையான பாதிப்பை சந்தித்திருக்கிறார்கள். இதன் காரணமாக, இலங்கையின் மக்கள் அந்த நாட்டு அரசாங்கத்திற்கு எதிராக பொதுமக்கள் அனைவரும் போராட்டத்தில் குதித்தனர். இதன் காரணமாக, அந்த நாட்டின் பிரதமர் பதவி வகித்து வந்த மஹிந்த ராஜபக்ஷ … Read more

இலங்கையில் அதிபரின் வரம்பற்ற அதிகாரம் முடிவுக்கு வருகிறது! இன்று ஒப்புதல் வழங்கும் நாடாளுமன்றம்!

நம்முடைய அண்டை நாடான இலங்கையில் இந்தியாவைப் போன்று அல்லாமல் அதிபர் ஆட்சி முறை நடைபெற்று வருகிறது. அந்த நாட்டில் அதிபருக்கு எல்லையற்ற அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. அதாவது அதிபரின் கீழ் தான் ஆட்சி நடைபெறும் அவரே பிரதமர் மற்றும் அமைச்சரவை சகாக்களை முடிவு செய்வார். மேலும் நாட்டின் அரசியல் சாசனத்தை பொறுத்தவரையில் அதிபரே அனைத்துமாக திகழ்ந்து வருபவர். குறிப்பிட்டுச் சொல்லவேண்டும் என்று சொன்னால் அமெரிக்காவைப் போன்று அதிகார அந்தஸ்துடைய ஒட்டுமொத்த அதிகாரத்தையும் தன் கையில் வைத்திருக்கும் நாட்டின் மிக … Read more