முதன் முதலாக இந்த பதவியில் கடற்படை முன்னாள் தளபதியா?
இலங்கை நாடாளுமன்ற தேர்தலைத் தொடர்ந்து, மகிந்த ராஜபக்சே மீண்டும் பிரதமராக பதவி ஏற்றுள்ளார். புதிய அரசின் வெளியுறவு செயலாளராக இலங்கை கடற்படை முன்னாள் தளபதி ஜெயநாத் கொலம்பேஜ் நியமிக்கப்பட்டுள்ளார். இப்பதவியில் ராணுவ பின்னணி கொண்டவர் நியமிக்கப்படுவது இதுவே முதல்முறை ஆகும். மேலும் இவர் பேசும்போது புதிய இலங்கை அரசின் வெளியுறவு கொள்கை, இந்தியாவுக்கு முன்னுரிமை அளிக்கும் ‘முதலில் இந்தியா’ ஆகும். இந்தியாவின் நலன்களை பாதுகாப்போம். அதாவது, இந்தியாவின் பாதுகாப்புக்கு தீங்கு விளைவிக்கும் எந்த காரியத்தையும் செய்ய மாட்டோம். … Read more