அதிபர் பதவியை விலக கோரி 1 லட்சம் பேர் போராட்டம்

ஒருங்கிணைந்த சோவியத் ரஷியாவில் இருந்து 1991 ஆம் ஆண்டு பிரிந்து பெலாரஸ் தனி நாடாக அறிவிக்கப்பட்டது. பெலாரஸ் ஒரு ஐரோப்பிய நாடாகும். அந்நாட்டில் 1994 ஆம் ஆண்டு முதல் முறையாக அதிபர் தேர்தல் நடைபெற்றது.  26 ஆண்டுகளாக அதிபராக செயல்பட்டு வரும் அலெக்சாண்டருக்கு எதிராக போட்டியிட்ட பிரதான எதிர்கட்சி தலைவரான ஸ்வியாட்லானா சிகானெஸ்கயா 8.9 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இந்த தேர்தலில் வெளியான முடிவுகள் மோசடியானவை என எதிர்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகிறது. தலைநகர் மின்ஸ்க் … Read more

அமெரிக்காவில் மீண்டும் வெடிக்கும் போராட்டம்

அமெரிக்காவில் கடந்த மார்ச் மாதம் போலீஸ் காவலில் கறுப்பினத்தை சேர்ந்த டேனியல் புரூடி உயிரிழந்த சம்பவத்திற்கு நீதிக்கேட்டு அமெரிக்காவின் ரோசெஸ்டரில் வெள்ளிக்கிழமை பேரணி நடைபெற்றது. அமைதியாக சென்ற பேரணி, நீதிமன்ற வீதியில் சென்றபோது, அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். புரூடியை கைது செய்து போலீசார் அழைத்து சென்ற வீடியோ பதிவுகளை அவரது குடும்பத்தினர் இந்த வாரம் வெளியிட, அது போலீசாருக்கு எதிரான போராட்டத்தில் சுமார் 2 லட்சம் பேர் வரை பங்கேற்கும் வகையில் மாற்றியுள்ளது. அமெரிக்காவில் கடந்த  வார … Read more

அரசுக்கு எதிராக மொரீஷியஸில் வெடிக்கும் போராட்டம்

மொரீஷியஸ் தீவுப்பகுதியில் மிகப்பெரிய அளவிலான சுற்றுச்சூழல் பேரழிவு ஏற்பட்டு வருகிறது. டன் கணக்கில் எண்ணெய் கடலில் கலந்துள்ளதால் அவற்றை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த எண்ணெய் கப்பல் விபத்து மொரீஷியஸ் தீவுப்பகுதியில் உள்ள கடல் உயிரினங்களுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. சுற்றுலாவை முக்கிய வருவாயாக கொண்டுள்ள மொரீஷியஸ் தீவுகள் சம்பவத்தால் பெரும் இழப்பை சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. மொரீஷியஸ் நாட்டின் தலைநகர் போர்ட் லூயிஸ் நகரில் நேற்று திரண்ட ஆயிரக்கணக்கானோர் எண்ணெய் கப்பல் விபத்தை கையாள்வதில் … Read more

பாகிஸ்தானில் நடைபெறும் மிகப்பெரிய போராட்டம்

பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள ஜீலம்- நீலம் ஆற்றின் குறுக்கே கோஹலா என்ற இடத்தில் அணை கட்டி 1,124 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் தொடர்பாக சீனா, பாகிஸ்தான் அரசுகள் மற்றும் சீன நிறுவனம் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இதற்கு 5.8 பில்லியன் டாலர் செலவாகும். இந்த திட்டத்திற்கு ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.  நீலம் – ஜீலம் ஆற்றில் சீன நிறுவனங்களால் பெரிய அணைகள் கட்டப்படுவதை எதிர்த்து பாகிஸ்தானின் முசாபராபாத் நகரில் நேற்று இரவு பெரிய போராட்டங்களும் தீபந்த … Read more

போராட்டதிற்கு திரளாக வாருங்கள்! திமுக தொண்டர்களுக்கு கடிதம் மூலம் அழைப்பு விடுத்தார் மு.க.ஸ்டாலின்.

போராட்டதிற்கு திரளாக வாருங்கள்! திமுக தொண்டர்களுக்கு கடிதம் மூலம் அழைப்பு விடுத்தார் மு.க.ஸ்டாலின். முப்பெரும் விழாவினை வெற்றிகரமாகவும் புதுமையாகவும் நடத்தி முடித்திட உணர்வுப்பூர்வமாக ஒத்துழைப்பு நல்கிய உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து கடிதம் எழுதுவதற்கு முன்பே, களத்திற்கு அழைக்கின்ற கடிதத்தினை எழுதுகின்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது. தந்தை பெரியார் பிறந்தநாளில் பிறந்த திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு இன்று 70ஆம் அகவை. அகம் மகிழ்ந்து கொண்டாட வாருங்கள் என உங்களில் ஒருவனான நான் அழைக்கவில்லை. அறப்போர்க்களம் காண வாருங்கள் என்றுதான் … Read more

மத்திய அரசுக்கு எதிராக திமுக நடத்தவுள்ள ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கலந்து கொள்ள வேண்டும்! திகார் சிறையிலிருந்து பா.சிதம்பரம் கோரிக்கை.

இநதியை திணிக்கும் மத்திய அரசுக்கு எதிராக நாளை மறுநாள் திமுக நடத்தவுள்ள ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கலந்து கொள்ள வேண்டும்! திகார் சிறையிலிருந்து பா.சிதம்பரம் கோரிக்கை. பாஜக அரசின் இந்தி திணிப்புக்கு எதிராக திமுக நடத்தவுள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியும் கலந்துகொண்டு தனது எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் பா.சிதம்பரம் அவர்கள் சிறையில் இருந்து தன் குடும்பத்தினர் வாயிலாக ட்விட்டர் மூலமாக தமிழக காங்கிரஸ் தலைவர் திரு கே.எஸ்.அழகிரி அவர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். … Read more