நோய்த்தொற்று பரவல்! புதிய தளர்வுகளை அறிவித்த தமிழக அரசு!

தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவலின் இரண்டாவது அலை பல இடங்களில் குறைந்திருந்தாலும், தற்சமயம் வரையில் நோய்த்தொற்று பரவல் முழுமையாக கட்டுக்குள் வரவில்லை என்றுதான் சொல்லப்படுகிறது. இதன் காரணமாகவே தமிழக அரசு பொது மக்களுக்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தி இருக்கிறது. இதற்கிடையில் தமிழ் நாட்டில் அமலில் இருக்கின்ற ஊரடங்கு வரும் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகள் அனைத்தும் மற்றும் கேளிக்கை விடுதிகள் நீச்சல் குளங்கள், பொதுமக்கள் பங்கேற்று கொள்ளும் சமுதாய மற்றும் அரசியல் சார்ந்த கூட்டங்கள், பொழுதுபோக்கு, … Read more

இந்த தவறுக்கு அவர்கள் தான் காரணம்! பீதியைக்கிளப்பும் தமிழக அரசு!

ஈரோடு மாவட்டத்தில் நடந்த கேபிள் டிவி ஆபரேட்டர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் தலைவர் சிவக்குமார் உரையாற்றினார்.அப்போது அவர் தெரிவித்ததாவது சென்ற அதிமுக ஆட்சி காலத்தில் தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு சொந்தமான 8 லட்சம் செட்டாப் பாக்ஸ்கள் காணாமல் போயிருப்பதாக அந்த நிறுவனத்தின் தலைவர் சிவக்குமார் தெரிவித்திருக்கிறார். அதிமுகவின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் 34 லட்சம் செட்டாப் பாக்ஸ்கள் கொடுக்கப்பட்டது. இருந்தாலும் தற்சமயம் 26 லட்சம் செட்டாப் … Read more

கர்நாடகாவின் முடிவிற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசு! செவிசாய்க்குமா மத்திய அரசு?

தமிழ்நாட்டிற்கு குடிநீர் ஆதாரமாக விளங்கி வரும் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டும் முடிவில் கர்நாடக அரசு மிகவும் உறுதியாக இருக்கிறது. ஒருவேளை அந்த பகுதியில் அணை கட்டப்பட்டு விட்டால் தமிழ்நாட்டிற்கு தற்போது வந்து கொண்டிருக்கும் காவேரி நதி நீர் முழுவதுமாக நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக, மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவதற்கு தமிழக அரசு ஆரம்பத்திலிருந்தே கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றது. இதனை பிரதமர் நரேந்திர மோடியின் கவனத்திற்கு … Read more

பல மாவட்டங்களில் நிவாரண தொகையுடன் கூடிய மளிகை பொருட்கள் கட்! பரிதவிப்பில் பொதுமக்கள்!

கடலூர் கிருஷ்ணகிரி விழுப்புரம் பெரம்பலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் தமிழக அரசின் மளிகை பொருட்களை பெற இயலாமல் பொதுமக்கள் தவித்து வருவதாக தகவல்கள் கிடைத்திருக்கின்றன. முதலமைச்சர் தனி கவனம் செலுத்தி எல்லோருக்கும் மளிகை தொகுப்புடன் கூடிய நிவாரணத் தொகையை கிடைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தெரிவித்திருக்கின்றார். திமுகவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி நோய்த்தொற்று காலத்தில் வாழ்வாதாரம் இழந்து தவித்து வந்த குடும்ப அட்டை வைத்திருக்கின்ற குடும்பங்களுக்கு முதல் தவணை ஏற்கனவே அறிவிக்கப்பட்டு … Read more

முதல் கூட்டத் தொடரிலேயே மத்திய அரசின் திட்டத்திற்கு ஆப்பு வைத்த தமிழக அரசு!

நீட் தேர்வு காரணமாக, தமிழக மாணவர்கள் பாதிப்படையாமல் இருப்பதற்கு புதிய சட்ட முன்வடிவு நிறைவேற்றப்படும் என்று சட்டசபையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்து இருக்கின்றார். மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று தெரிவித்து இந்த தேர்வை அறிமுகப்படுத்தியதில் இருந்து தமிழ்நாட்டில் இருந்து எதிர்ப்பு கிளம்பி வருகிறது. கடந்த 2017 ஆம் ஆண்டு தொடர்ச்சியாக நீட் தேர்வு மூலமாகவே மருத்துவ சேர்க்கை நடைபெற்றது. இதன் காரணமாக, கிராமப்புற மற்றும் மாநில பாடத்திட்டத்தில் … Read more

தளர்வுகளை அறிவித்தது தமிழக அரசு! தொடங்கிய பேருந்து சேவை!

தமிழ்நாட்டில் நோய்தொற்று பரவலை இரண்டாவது அலை தாக்கத்தால் முதல் அலையை விடவும் பாதிப்பு அதிகமாக இருந்தது. அதுவும் முதல் அலையில் சாதாரண பொது மக்களை பாதித்த இந்த வைரஸ் தொற்று இரண்டாவது அலையின் போது மிகப்பெரிய ஜாம்பவான்களை பலிவாங்கியது.இதனை தடுப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் பல கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார்கள். ஆனாலும் இந்த நோய் தொற்றினை அவ்வளவு விரைவில் கட்டுப்படுத்த இயலவில்லை. இந்த நிலையில்தான் தமிழகத்தில் சட்டசபை பொதுத்தேர்தல் நடைபெற்றது அந்த தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் … Read more

அறநிலையத் துறை வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! பொதுமக்கள் மகிழ்ச்சி!

தமிழ்நாட்டில் உச்சத்தில் இருந்த நோய்த்தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. சென்ற மாதம் 35 ஆயிரத்திற்கும் மேல் இருந்த தினசரி பாதிப்புகள் தற்சமயம் 9 ஆயிரத்திற்கும் கீழே குறைந்து இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. தமிழக மக்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தியாக இருக்கிறது.இந்த நோய் தொற்று பாதிப்பினால் தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறார்கள். பொதுமக்கள் அதோடு பல தொழில் நிறுவனங்களும் பலத்த நஷ்டத்தை சந்தித்திருக்கிறார்கள். தொழில் நிறுவனங்கள் மட்டுமல்லாது நடைபாதை வியாபாரிகள், டீக்கடை, பெட்டிக்கடை மற்றும் … Read more

தமிழ்நாடு ஆசிரியர் கழகம் தமிழக அரசுக்கு எழுதிய திடீர் கடிதம்! என்ன முடிவு எடுக்கப் போகிறது தமிழக அரசு!

பதினோராம் வகுப்பு மாணவர்களின் மாணவர் சேர்க்கையை ஒத்திவைக்க வேண்டும் என்று தமிழக முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். ஜூன் மாதம் 11ஆம் தேதி அதாவது இன்று முதல் ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை தர வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டு இருக்கிறது. அதேபோல் இன்று முதல் பதினோராம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கை தொடங்கும் என்றும் இன்றிலிருந்து மாணவர்கள் பள்ளிக்கு நேரில் வந்து புத்தகங்களை வாங்கிக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.இந்த சூழ்நிலையில் தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி … Read more

தமிழக அரசு வெளியிட்ட புதிய அரசாணை! தொழில் நிறுவனங்கள் மகிழ்ச்சி!

தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது. அதோடு தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கிடையில் ஊரடங்கு காரணமாக, சிறு மற்றும் குறு அதோடு நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடுமையான இழப்பை சந்தித்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்த சூழ்நிலையில் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை உள்ளடக்கிய சங்கத்தின் பிரதிநிதிகள் காலாவதியாக இருக்கின்ற உரிமங்களை அரசு நீட்டித்து தரவேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். அவர்களுடைய இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அரசாங்கம் … Read more

வகுப்புகளை தொடங்கலாம்! பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவு!

தமிழ்நாட்டில் நடைபெற்ற பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையிலும் தட்டுப்பாடு காரணமாக, பள்ளிகள் கடந்த ஒரு வருட காலமாக மூடப்பட்டிருக்கும் நிலையில் இணையதளம் மூலமாக வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. ஒன்றாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை தேர்வுகள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. இந்த சூழ்நிலையில் ஜூன் மாதம் மூன்றாவது வாரத்தில் பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்குவதற்கு உத்தரவிட்டிருக்கிறது தமிழக பள்ளிக் கல்வித்துறை .அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டிருக்கிறது என்று தெரிவிக்கப்படுகிறது. அடுத்த … Read more