பொதுவாக உப்பை மகாலட்சுமியின் அம்சமாக கருதுவோம். நம் உடம்பிற்கு சர்க்கரை சத்து, கொழுப்பு சத்துக்கள் எவ்வளவு அவசியமோ அதே போன்றுதான் நம் உடலில் உப்புச் சத்தும் அத்தியாவசியமான ஒன்றாகும். உப்பில்லா பண்டம் குப்பையிலே என்று பெரியவர்கள் கூறுவார்கள்.
இந்தக் கூற்றுக்கு இணங்க உணவில் சேர்க்கும் சிறிதளவு உப்பு நம் உடலிற்கு பெரிய அளவு நன்மைகளை தருகின்றது. ரத்தம் ஓட்டத்தை சீர்படுத்துவது, உடம்பில் இரும்பு சத்தை அதிகரிப்பது இதுபோன்ற பல்வேறு நன்மைகளை நமக்கு தருகின்றது.
ஆனால், உப்பை தண்ணீரில் போட்டு குளிப்பதனால் நம் உடலின் வெளித்தோற்றத்தில் ஏற்படும் மாற்றங்களை நாம் அறிந்ததுண்டா? சிறிதளவு உப்பை நம் தண்ணீரில் போட்டு குளித்தால் நாம் வியந்து போகும் அளவிற்கு நம் சரும பிரச்சனைகளை குறைக்கும். அதைப்பற்றி இதில் காண்போம்?
*உடலில் உள்ள பாக்டீரியாக்களை அகற்றி நோய் நொடியிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.
*உடலில் ஏற்ப்பட்ட புண்கள் விரைவில் குணமடையும்.
*சரும பிரச்சனைகளுக்கு ஏற்றது. குறிப்பாக வயாதான தோற்றதை வரவிடாமல் தடுக்கிறது. மேலும், சருமத்தில் ஏற்ப்படுகின்ற அரிப்பு, எரிச்சலை சரிசெய்கிறது.
*உடல் தசைகளில் ஏற்ப்பட்ட வீக்கங்கள் குறைந்து மூட்டுகளுக்கு வலு கொடுக்கிறது.