மதுரை மீனாட்சி அம்மனை பற்றி சமூக வலைதளத்தில் இழிவுபடுத்திய இளைஞர் கைது! கடவுளை இப்படியா விமர்சிப்பது.?
தமிழ் கடவுள் மீனாட்சி அம்மனை பற்றி இழிவுபடுத்தும் விதமாக சமூக ஊடகத்தில் எழுதிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியை சேர்ந்த மனோகரன் என்ற இளைஞர் ஒருவர் மதுரை மீனாட்சி அம்மனை பற்றி அநகாரிமாக எழுதிய சம்பவம் தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது சமூகவலைதளமான முகநூல் பக்கத்தில் மதுரை மீனாட்சி அம்மனை பற்றி இழிவுபடுத்தும் நோக்கில் திட்டமிட்டே மனோகரன் எழுதியுள்ளார். பின்னர் பலத்த எதிர்ப்பு கிளம்பிய நிலையில் அந்த பதிவை நீக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மீனாட்சி அம்மனை பற்றி சமூக வலைதளத்தில் தவறாக பதிவு செய்த நபரை உடனடியாக கைது செய்யுமாறு, திண்டுக்கல் தாலுகா பகுதி காவல்நிலையத்திற்கு முன்பு இந்து முண்ணனியினர் சமூக இடைவெளியை கடைபிடித்து போராட்டம் நடத்தினர். அப்போது தமிழ் கடவுளை தவறாக பேசிய இளைஞரை கைது செய்யுமாறு வலியுறுத்தினர்.
இதையடுத்து பொன்னமராவதி பகுதியைச் சேர்ந்த மனோகரன் என்பவரை போலீசார் கைது செய்தனர். கைதான நபர் போலியான சாதியொழிப்பு பேசும் நபர் என்றும் கூறப்படுகிறது. தமிழர்கள் வணங்கும் மதுரை மீனாட்சி அம்மனை தரக்குறைவாக விமர்சித்த சம்பவம் பலரை கோபமடையச் செய்துள்ளது.