“எட்டுத்திக்கும் பற’ திரையரங்கே காலியா கெடக்கு; இதுல தமிழ் ராக்கர்ஸ் வேற! படத்தின் இயக்குனர் புலம்பல்!
சமீபத்தில் வெளியான எட்டுத்திக்கும் பற திரைப்படம் குறித்து புலம்பும் வகையில் படத்தின் இயக்குனர் வ.கீரா தனது முகநூல் பக்கத்தில் வேதனையை தெரிவித்ததோடு தமிழ்ராக்கர்ஸ் இப்படத்தை எச்.டி -யாக வெளியிட்டுள்ளதாகவும், முகநூலை விட்டே செல்வதாகவும் அவரே கூறிள்ளார்.
இப்படம் சாதிய ஆணவத்திற்கு எதிராக எடுத்த படம் என்று கூறப்படுகிறது. முதலில் படத்தின் பெயர் “பற’ என்றே சூட்டப்பட்டு சாதியின் பெயர் தெரிவதுபோல் இருப்பதாக கூறி தணிக்கை குழுவால் இப்பெயர் நிராகரிக்கப்பட்டது. பின்னர் எட்டுத்திக்கும் பற என்று படத்தின் பெயர் மாற்றப்பட்டவுடன் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இப்படம் சென்னை நடைபாதையில் வாழும் அடித்தட்டு மக்களின் வாழ்வில் ஏற்படும் தினசரி சம்பவங்களை கூறும் படமாகவும் சாதிக்கு எதிரான படமாகவும் வெளியானது.
இதையடுத்து, படம் வெளியாகி எதிர்பார்த்த அளவுக்கு ஓடாமல் தியேட்டரே காலியாக காட்சியளிக்கிறது. படத்தின் பெயர்தான் படுதோல்விக்கு வழிவகுத்ததாக பலர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். சில தியேட்டர்களில் வெறும் 4 காட்சிகள் ஓட்டிவிட்டு படத்தை தூக்கிவிட்டனர். 200 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியான இப்படம் மக்களிடையே எந்தவித ஈர்ப்பையும் ஏற்படுத்தவில்லை என்பதே உண்மை.
இந்நிலையில் படத்தின் இயக்குனர் வ.கீரா தனது முகநூலில் வேதனையுடன் புலம்புவது போல் பதிவை இட்டுள்ளார்.
பதிவில் கூறியிருப்பதாவது;
தமிழ் ராக்கர்சிலும்
படம் அழகாக வந்துள்ளதாம்…
போங்கடாங்க…திரையங்கே காலியா வச்சுக்கிட்டு..காமெடி பன்றீங்க…ஓ..பணமா..,நீ இலவசமா பாரு.,.ஆனா எங்கள் உழைப்பின் பணத்தை கொஞ்சம் யோசி…படம் பாக்க மாட்டேன்னா..அப்படியே இரு…உன் உழைப்பு தனிநபர் பங்கு..கூட்டு உழைப்புக்கு..பதில் சொல்..அதற்கான முதலீட்டு உழைப்புக்கு பதில் சொல்….
https://m.facebook.com/story.php?story_fbid=2983672785031074&id=100001651461359
படம் ஓடாததால் இவ்வாறு தனது வேதனையை பகிர்ந்துள்ளார்.