நாளை கூடுகிறது தமிழக பாஜக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!!

0
244
#image_title

நாளை கூடுகிறது தமிழக பாஜக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!!

இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் இன்னும் பாஜக தலைமை தமிழக இறுதி வேட்பாளர் பட்டியலை வெளியிடவில்லை.

கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு பாஜக தமிழக வேட்பாளர்கள் மாதிரி பட்டியலை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பாஜக டெல்லி தலைமையில் அளித்தநிலையில், நாளை சென்னை கமலாலயத்தில் பாஜக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு முக்கிய ஆலோசனை கூட்டத்தை நடத்துகிறது, இந்த கூட்டத்தில் மத்திய இணை அமச்சர் எல்.முருகன், எம்.எல்.ஏ.வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

டெல்லியில் பாஜக மையக்குழு கூட்டம் நாளை நடைபெறவுள்ள அதே சமயத்தில் தமிழகத்தில் தேர்தல் ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் நடைபெறவுள்ளது.

எனவே இந்த கூட்டம் முடிந்து நாளை அல்லது நாளை மறுநாள் தமிழக இறுதி வேட்பாளர் பட்டியல் மற்றும் மற்ற செயல்பாடுகள் குறித்த தகவல்கள் நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
Savitha