நோய்த் தொற்று பரவல் வேகம் சற்றுக் குறைந்து வந்தாலும் இன்னமும் அதன் தீவிரம் குறையவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. உடலில் எதிர்ப்பு சக்திக்கு ஏற்றவாறு வைரஸ் பரவல் தீவிரமாகவே செயல்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.
தற்போது சேர்த்துக் கொள்வதன் மூலம் மட்டுமே நோய்த் தொற்று வைரசை கட்டுப்படுத்த இயலும் என்று எல்லாத் தரப்பினரும் தெரிவித்து வருகிறார்கள். ஆனால் தடுப்பூசி கிடைப்பதே மிகப்பெரிய சவாலாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இதற்கு இடையில் டெல்பிளஸ் என்ற வகை வைரஸ் பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் ஒருவருக்கு டெல்டா பிளஸ் வைரஸ் உறுதி செய்யப்பட்டதாகவும், இருந்தாலும் அவர் குணமடைந்து விட்டதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருக்கின்றார்.
இவ்வாறு நோய்த்தொற்றின் தாக்கம் தொடர்ச்சியாக அதிகரித்து வருவது எப்போது முற்றிலுமாக இந்த வைரஸ் பரவல் அழியும் என்று இதுவரையில் யாராலும் கணிக்க முடியவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், சசிகலாவின் சகோதரர் திவாகரன் மூச்சுத்திணறல் காரணமாக, தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையிலிருந்து வருகிறார் என்று தெரிவிக்கப்படுகிறது.
அவருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டதையடுத்து பாதிப்பு மிகவும் தீவிரமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக, அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையிலிருந்து வருகிறார் என்று தெரிவிக்கப்படுகிறது.
அதோடு விரைவில் அவரைக் காண்பதற்கு சசிகலா மற்றும் தினகரன் உள்ளிட்டோர் வருகை தரலாம் என எதிர்ப்பார்க்கபடுகிறது.சசிகலா சிறையில் இருந்து விடுதலையான திலிருந்து வெளியே தலைகாட்டாமல் இருந்து வருகிறார். அவர் அரசியல் விலகல் தொடர்பான அறிவிப்பை கூட இரவு நேரத்தில்தான் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.