+2 மாணவர்களே! அடுத்து எதை படிக்கலாம் என குழப்பமா? உங்களுக்கான திசைகாட்டி நிகழ்ச்சி! யூடியூப் நேரலை!

0
122

+2 மாணவர்களே! அடுத்து எதை படிக்கலாம் என குழப்பமா? உங்களுக்கான திசைகாட்டி நிகழ்ச்சி! யூடியூப் நேரலை!

 

https://youtu.be/XvHrioiWnT4

 

கொரோனா பெரும் தொற்றின் காரணமாக அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தன. அனைத்தும் ஆன்லைன் வழி கற்றல் மூலமாக மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு சேலத்தில் உள்ள நரசுஸ் சாரதி இன்ஸ்ட்யூட் ஆஃப் டெக்னாலஜி என்ற கல்லூரி திசைகாட்டி என்னும் நிகழ்ச்சியை யூடியூப் நேரலையின் மூலமாக பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு வழங்குகிறது.

இந்த திசைகாட்டி என்ற நிகழ்ச்சி இரண்டு நாட்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. இதில் பல்வேறு நிறுவனங்களில் இருந்து மிகவும் தேர்ந்த மற்றும் அனுபவம் உள்ள நிர்வாகிகள் பேச உள்ளனர்.

அடுத்து என்ன படிக்கலாம்? எந்த மாதிரியான தொழில் முன்னேற்றம் அடைய வாய்ப்பு இருக்கும்? எந்த படிப்பை நீங்கள் தேர்வு செய்யும் பொழுது எந்த மாதிரி யான பயனைப் பெறுவீர்கள்? எதற்கு முக்கியத்துவம் கொடுக்க எந்த படிப்பை படிக்க வேண்டும்? இன்னும் எத்தனை வருடங்களுக்கு எந்த தொழில் மேலோங்கி நிற்கும்? அதற்கு ஏற்றவாறு எதை படிக்க வேண்டும் ? என்பதைப் பற்றி மிகவும் விரிவாக இரண்டு நாட்கள் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இன்று காலை 8.30 மணி முதல் தொடங்க உள்ளது. அனைத்து பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களும் யூடியூபில் நேரலையில் வரும் இந்த நிகழ்ச்சியை கண்டு தங்களது வாழ்வை மாற்றக்கூடிய படிப்பை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.

இந்த நிகழ்ச்சி இரண்டு நாட்கள் தொடர்ந்து நடைபெறும். தங்களுக்குத் தெரிந்த பன்னிரண்டாம் வகுப்பு முடிந்த மாணவர்கள் இருந்தாலும் அவர்களுக்கு இந்த செய்தியை சொல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

 

நேரலை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

author avatar
Kowsalya