மும்பை புறப்பட்டார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்!

0
279
#image_title

மும்பை புறப்பட்டார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்!

ராகுல்காந்தியின் ஒற்றுமை யாத்திரை நிறைவு விழா மற்றும் இந்தியா கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொள்ள மும்பை புறப்பட்டார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.

கடந்த 14ஆம் தேதி மணிப்பூரில் இந்திய ஒற்றுமை யாத்திரையை தொடங்கிய ராகுல்காந்தி 15 மாநிலங்கள் வழியாக சுமார் 6,700 கிலோமீட்டர் தொலைவை 63 நாட்களில் கடந்து யாத்திரை மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் தாணேவில் உள்ள அம்பேத்கர் நினைவிடத்தில் தனது ஒற்றுமை யாத்திரை பயணத்தை நிறைவு செய்கிறார்.

தமிழகத்தில் திராவிட முன்னேற்றக்கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து கூட்டணியிட்டு வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கவுள்ளது.

இந்த நிறைவு விழாவிற்காக காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று மாலை மும்பையில் பிரமாண்ட பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது.

இந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்துக்கொள்ள தமிழகத்தை சேர்ந்த திமுக தலைவர் ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வபெருந்தகை உள்ளிட்டோர் மும்பை புறப்பட்டு சென்றனர்.

Previous articleஜீன் 10 வரை பள்ளிகளுக்கு கோடைவிடுமுறை நீட்டிப்பு – காரணம் இதுதான்!
Next article‘ஒரே நாடு ஒரே தேர்தலை’விமர்சித்த கமல் – பதிலடி கொடுத்த வானதி சீனிவாசன்!