தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு? தமிழக முதல்வர் வெளியிட போகும் அதிரடி அறிவிப்பு

Photo of author

By Anand

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு? தமிழக முதல்வர் வெளியிட போகும் அதிரடி அறிவிப்பு

தற்போது நிலவி வரும் கொரோனா 2 வது அலையில் பாதிப்பானது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.இந்நிலையில் மத்திய அரசு மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்தியது.இதனையடுத்து சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் சில கட்டுபாடுகளை மீண்டும் பிறப்பித்துள்ளனர்.

அந்த வகையில் தமிழகத்திலும் சமீபத்தில் ஏற்கனவே இருந்த தளர்வுகளில் சில புதிய கட்டுபாடுகளை மீண்டும் பிறப்பித்துள்ளனர்.மேலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது காரணமாக அடுத்ததாக புதிய கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பாகவும், இரவு நேரத்தில் ஊரடங்கை செயல்படுத்துவது குறித்தும்  தமிழக அரசு சார்பாக ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

இந்த ஆலோசனை கூட்டத்தில்  சுகாதாரத் துறை அதிகாரிகள் உள்பட பல்வேறு துறைகளின் உயர் அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் பல்வேறு முன்னேற்பாடுகள் மற்றும் கட்டுபாடுகள் குறித்து ஆலோசனை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக முதல்வர், முக்கிய அமைச்சர்கள் யாரும் பங்கேற்கவில்லை.

Edappadi Palaniswami Property List
Edappadi Palaniswami Property List

இந்நிலையில், இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலத்திலிருந்து சென்னை வருகிறார். இதனையடுத்து கொரோனா பரவலை கட்டுபடுத்த தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக அவர் ஆலோசனை நடத்த உள்ளார்.

இந்த ஆலோசனைக் கூட்டமானது முதலமைச்சரின் முகாம் அலுவலகத்திலேயே நடைபெறவிருப்பதாக கூறப்படுகிறது. இதில் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் சில அதிகாரிகள் பங்கேற்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆலோசனை கூட்டத்திற்குப் பின்னர்தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்படுமா? என்பது பற்றியும், மேலும் சில புதிய கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்தும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.