தேசிய தூய்மை நகரம் பட்டியலில் தமிழகம் பிடித்த இடம் :?

0
88

தேசிய தூய்மை நகரம் பட்டியலில் தமிழகம் பிடித்த இடம் 😕

தமிழகம் தேசிய தூய்மை நகர பட்டியலில் இருந்து முதல் 10 இடத்தை எந்த மாவட்டமும் பிடிக்கவில்லை.தமிழகத்தில் 40 ஆவது இடத்தை பிடித்த கோயம்புத்தூர் ,42-வது இடத்தில்  மதுரையும், தமிழகத்தின் தலைநகராக  சென்னை மாநகராட்சி 45வது இடத்தையும் பிடித்துள்ளது.

மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் நாட்டில் தூய்மை நகரங்களின் பட்டியலை ஸ்வச் சுர்வேக்ஷன் 2020 என்ற திட்டத்தின் கீழ் வெளியிட்டிருந்தது. மக்கள்தொகை ,சுகாதாரம், தூய்மை போன்ற அடிப்படை கொண்டு பிரிக்கப்படுகின்றது.10 லட்சம் பேர் வசிக்கும் மக்கள் தொகை நகரங்கள் பட்டியல் அடிப்படையில் 40 ஆவது இடத்தை  கோயமுத்தூர் நகரம், 10 லட்சத்திற்கும் அதிகமானோர் வசிக்கும் நகரங்களில் அடிப்படையில் 42-வது இடத்தில் மதுரையும், 45 இடத்திலும் சென்னையும் இடம் பிடித்துள்ளது.திருச்சி 102 இடத்தை பிடித்துள்ளது.

6000 மதிப்பெண்களுக்கு கோயம்புத்தூர் நகரம் 2337.12 மதிப்பெண்களும்,
திருச்சி நகரம் 3360.47 மதிப்பெண் பெற்றுள்ளது. இந்த பட்டியலில் 159-வது இடத்தில் திருநெல்வேலியும், 173-வது இடத்தில் சேலமும், திருப்பூர் 223வது இடத்தையும் பிடித்துள்ளன.

நாட்டிலேயே தொடர்ந்து நான்குமுறை முதலிடம் பிடித்த இந்தூர் இம்முறையும் முதலிடத்தில் உள்ளது.இரண்டாம் இடத்தை சூரத்தும், மூன்றாம் இடத்தை நவி மும்பையும், நான்காம் இடத்தை டெல்லியும் இடம்பிடித்துள்ளது.

உலகிலேயே மிகப்பெரிய ஆய்வு ஸ்வச் சர்வேக்ஷன் . இதில் 4242 நகரங்களில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. இதற்கு நாட்டில் 1.9 கோடி பேர் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.