சசிகலா குடும்பத்திற்கு எதிராக தமிழக அரசு எடுத்த அடுத்த நடவடிக்கை!
சொத்துக்குவிப்பு வழக்கில் கைதான சசிகலா சிறையில் விடுதலையாகி கொரோனா பாதிப்பு காரணமாக பெங்களுரில் வசித்து வந்தார்.இதனையடுத்து இன்று அவர் சென்னைக்கு வர இருக்கிறார்.அவர் சென்னைக்கு வரும் நிலையில் தமிழக அரசு பல கட்டுப்பாடுகளை சசிகலாவிற்கு எதிராக போட்டுள்ளது.
அவரின் வருகையையடுத்து தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வரும் சூழலில் சசிகலா குடும்பத்திற்கு எதிராக தமிழக அரசு அடுத்த நடவடிக்கையை எடுத்துள்ளது.இந்த நடவடிக்கையின் மூலம் சொத்துகுவிப்பு வழக்கின் இறுதி தீர்ப்பின்படி சசிகலா குடும்பத்திற்கு சொந்தமான காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு பகுதிகளிலுள்ள ஆறு சொத்துக்கள் அரசுடமை ஆக்கபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த சொத்துக்கள் இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு சொந்தமானவை.
இதற்கு முன்னதாக நேற்று சென்னையிலுள்ள இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு சொந்தமான ஆறு சொத்துக்களை அரசுடமை ஆக்கபடுவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது குறிபிடத்தக்கது.இன்று சசிகலா தமிழகம் வருவதையொட்டி அவருக்கு எதிரான நடவடிக்கையாகவும் இது பார்க்கப்படுகிறது.இதே வழக்கில் சிறை சென்ற இளவரசியும் இன்று சென்னை வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது