தமிழக அரசு வேலை.. மாதம் ரூ.15,000/- ஊதியம்!

0
273
#image_title

தமிழக அரசு வேலை.. மாதம் ரூ.15,000/- ஊதியம்!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் காலியாக உள்ள ஆசிரியர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. தகுதி, விருப்பம் இருக்கும் நபர்கள் விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு ஜனவரி 29 ஆம் தேதிக்குள் தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.

வேலை வகை: தமிழக அரசு வேலை

நிறுவனம்: அரசு உயர்நிலைப் பள்ளி(நீலகிரி மாவட்டம்)

பணி: ஆசிரியர்

பணியிடம்: நீலகிரி

கல்வித்தகுதி: ஆசிரியர் பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் பி.எட் படிப்பில் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வயது வரம்பு குறித்த விவரத்தை அறியவும்.

மாதம் ஊதியம்: இப்பணிக்கு தேர்வாகும் நபர்கள் மாதம் ரூ.12,500/- முதல் ரூ.15,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு முறை: நேர்காணல் மூலம் ஆசிரியர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட இருக்கின்றனர்.

விண்ணப்பிக்கும் முறை: தபால் வழி

ஆசிரியர் பணிக்கு தகுதி விருப்பம் இருக்கும் நபர்கள் nilgiris.nic.in என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கின்றது.

விண்ணப்பம் செய்ய இறுதி நாள்: 29-01-2024