தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!! நியாய விலைக் கடைகளுக்கு பறந்த உத்தரவு!!
தமிழக அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பால் ரேஷன் கார்டு அட்டை தாரர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்து வருகின்றனர்.
தமிழகத்தில் உள்ள நியாய விலை கடைகளின் மூலம் பொதுமக்கள் பலர் மலிவான விலையில் பருப்பு ,எண்ணெய் மற்றும் சர்க்கரை மற்றும் இலவசமாக அரிசி போன்ற பொருட்களை பெற்று பயனடைகின்றனர்.
இதனால் கோடிக்கணக்கான மக்கள் நலன் பெற்று அவர்களது வாழ்வாதாரம் காக்கப்பட்டு வருகின்றனர். அதேபோல் பொருட்கள் அனைத்தும் தரமாக உள்ளதா முறையாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படுகிறதா என்று அனைத்தும் சரி பார்க்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் பொருட்கள் அனைத்தும் தரமற்று இருந்தால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.பின்பு சட்ட விரோதமாகவோ அல்லது ஏதேனும் முறைகேட்டில் ஈடுபட்டால் உரிய தண்டனை வழங்கப்படும் என்றார்.
அதில் ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படும் பொருட்கள் அனைத்தும் உரிய அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.இவ்வாறு வழங்கப்படும் பொருட்களின் தரம் குறைந்த இருந்தால் உடனடியாக கிடங்குகளுக்கு அனுப்பப்படும்.
இதற்கு காரணம் ரேஷன் அட்டைகள் மூலமாக வழங்கப்படும் பொருட்களை சிலர் வாங்குவதில்லை இதனால் கடையில் தேங்கியிருக்கும் பொருட்கள் குறித்து புகார்கள் எழுப்பப்பட்டனர்.
இதனால் ரேஷன் கடைகளில் உள்ள பொருட்கள் உரிய நேரத்தில் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் தரமற்ற பொருட்கள் கிடங்குகளுக்கு அனுப்பப்பட வேண்டும் என்றார்.
இத்தகைக்கு முற்று புள்ளி வைக்கும் விதமாக இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.