விவசாயிகளே இந்த தொகையை பெற உடனே அப்ளை பண்ணுங்க!! தமிழக அரசின் புதிய அறிவிப்பு!!

0
140
#image_title

விவசாயிகளே இந்த தொகையை பெற உடனே அப்ளை பண்ணுங்க!! தமிழக அரசின் புதிய அறிவிப்பு!!

விவசாயிகள் தகுதிகளுக்கு ஏற்ப கடன் பெற்றுக்கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக விவசாயிகள் கூட்டுறவு சங்கங்களை அணுகி கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டுகளில் பயிர் கடனுக்கான வட்டி குறைந்து கொண்டே வந்தது.அதிலும் 2006 மற்றும் 2007 ஆம் ஆண்டுக்கான வட்டி மட்டும் 9 சதவீதத்திலிருந்து 7 சதவீதமாக குறைக்கப்பட்டது.

அப்போது குறைக்கப்பட்ட 7 சதவீதமாக இருந்த வட்டியே இன்று பயிர் கடன் வாங்கும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

குறைக்கப்பட்ட இந்த இரண்டு சதவீத வட்டியை தமிழ்நாடு அரசே வட்டி மானிய குழு கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கி வருகின்றது.

பிறகு 2009 ஆம் ஆண்டு தமிழக அரசு கூட்டுறவு சங்கங்களில் பயிர் கடன் வாங்கிய விவசாயிகள் உரிய காலத்திற்குள் கடனை திருப்பி செலுத்தினால் அவர்கள் வாங்கிய வட்டி அனைத்தையும் தமிழக அரசே ஏற்றுக்கொள்ளும் என்று தெரிவித்திருந்தது.

அதன் பிறகு விவசாயிகளுக்கு வட்டி இல்லாத பயிர் கடன் வழங்கப்பட்டு வருகின்றது.

அதனை அடுத்து விவசாயிகள் வாங்கிய பயிர் கடனை உரிய தேதிக்குள் செலுத்தி விட்டாள் அவர்கள் வாங்கிய ஏழு சதவீத வட்டியினை அரசே செலுத்தி வருகிறது.

கடந்த 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டில் மட்டும் 17.44 லட்சம் விவசாயிகளுக்கு கூட்டுறவு சங்கத்தின் வழியாக ரூ 13342.30 கோடி வழங்கப்பட்டது.

பின்னர் விவசாயிகளின் நலன் கருதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படுவது அதோடு அவர்களுக்கு தேவையான பயிர் கடனை வழங்க வேண்டும் என்று கூட்டுறவு சங்கங்களுக்கு வலியுறுத்துவது போன்ற பல்வேறு நலத்திட்டங்களை தமிழக அரசு விவசாயிகளுக்கு செய்து வருகின்றது.

இதனை அடுத்து விவசாயிகள் அவர்களது விவசாயத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவது விதைகளை வாங்குவது போன்ற எந்த தேவையாக இருந்தாலும் உடனே கூட்டுறவு சங்கங்களை அணுகி கடன் பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Previous articleஇவர்களுக்கு 10 கிராம் தங்கம் 25000 ரொக்கம் அடித்தது ஜாக்பாட்!! மிஸ் பண்ணிடாதீங்க உடனடியாக விண்ணப்பியுங்கள்!!
Next articleஇனி பாமாயில் எல்லாம் இல்லை!! ரேஷன் கடைகளில் வரும் அதிரடி மாற்றம்!!