தமிழக அரசு வேலை!! 8 ஆம் வகுப்பு படித்தவர்கள் உடனே விண்ணப்பம் செய்யவும்!!

Photo of author

By Divya

தமிழக அரசு வேலை!! 8 ஆம் வகுப்பு படித்தவர்கள் உடனே விண்ணப்பம் விண்ணப்பம் செய்யவும்!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இப்பணிகளுக்கு தகுதியும், ஆர்வமும் இருக்கும் நபர்கள் விண்ணப்பத்துடன் முறையான சான்றிதழ்களின் நகல்களை தபால் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு இருக்கிறது.

1)வேலை வகை: தமிழக அரசு பணி

2)நிறுவனம்: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை( திருப்பத்தூர்)

3)பதவி:

*அலுவலக உதவியாளர்

*ஜீப் டிரைவர்

*பதிவறை எழுத்தர் / ரெக்கார்டு கிளார்க்

*இரவு காவலர்

4)காலிப்பணியிடங்கள்:

அலுவலக உதவியாளர் – 11

ஜீப் டிரைவர் – 09

பதிவறை எழுத்தர்/ரெக்கார்டு கிளார்க் – 02

இரவு காவலர் – 02

5)கல்வித் தகுதி: இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வம் இருக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் எட்டாம் வகுப்பு மற்றும் 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அதன்படி அலுவலக உதவியாளர்,ஜீப் டிரைவர் பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 8 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பதிவறை எழுத்தர் / ரெக்கார்டு கிளார்க் பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இரவு காவலர் பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

6)வயது வரம்பு: இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு அதிகபட்ச வயது 32 வரை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. அரசு விதிகளின் படி மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர், இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு வயது வரம்பில் சில தளர்வுகள் வழங்கப்பட்டு இருக்கிறது.

7)ஊதிய விவரம்:

அலுவலக உதவியாளர் – ரூ.15,700/- முதல் ரூ.58,100/-

ஜீப் டிரைவர் – ரூ.19,500/- முதல் ரூ.71,900/-

பதிவறை எழுத்தர் / ரெக்கார்டு கிளார்க் – ரூ.15,900/- முதல் ரூ.58,500/-

இரவு காவலர் – ரூ.15,700/- முதல் ரூ.58,100/-

8)தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு

9)விண்ணப்பிக்கும் முறை : தபால் வழி

இப்பணிகளுக்கு தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் நபர்கள் https://tirupathur.nic.in/notice_category/recruitment/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதை பூர்த்தியிட்டு முறையான ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் வழியாக அனுப்பி வைக்க வேண்டும்.

முகவரி:

நேர்முக உதவியாளர்,
ஊரக வளர்ச்சி அலகு,
மூன்றாவது தளம் (E பிளாக்),
மாவட்ட ஆட்சியரகம்,
திருப்பத்தூர்-635601

விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்டோபர் 31