தமிழ்நாடு அரசு வேலை.. மாதம் ரூ.200000/- ஊதியம் பெற உடனே விண்ணப்பம் செய்யுங்கள்!மொத்தம் 369 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!!

தமிழ்நாடு அரசு வேலை.. மாதம் ரூ.200000/- ஊதியம் பெற உடனே விண்ணப்பம் செய்யுங்கள்!மொத்தம் 369 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!!

தமிழகத்தில் உள்ள பொதுப்பணித்துறை,நீர்வளத்துறை,மாசு கட்டுப்பாட்டு வாரியம் எனஉள்ளிட்ட பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.

இந்த காலிப்பணியிடங்களுக்கு மொத்தம் 369 பேரை பணியமர்த்த டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் முடிவெடுத்து இருக்கிறது.

வேலை வகை: அரசு பணி

நிறுவனம்: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி)

பதவி: தொழிற்பயிற்சி நிறுவனத்தின் உதவி இயக்குனர் (பயிற்சி) பள்ளியின் முதல்வர்,
உதவி பொறியாளர் (சிவில், நீர்வளத்துறை),உதவி பொறியாளர் (சிவில், பொதுப்பணித்துறை),
உதவி பொறியாளர் (ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை),பொறியாளர் (நெடுஞ்சாலைத்துறை),உதவி பொறியாளர் (வேளாண்மை பொறியியல்) உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு மொத்தம் 369 பேர் பணியமர்த்தப்பட உள்ளனர்.

கல்வித்தகுதி: மேலே குறிப்பிட்டுள்ள பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரிகளில் என்ஜினியரிங் படிப்பில் ஏதேனும் ஒரு பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: இந்த பணிகளுக்கு வயது விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்களின் அதிகபட்ச வயது வரம்பு 37 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

மாத ஊதியம்: இப்பணிகளுக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.ரூ.37,700/- முதல் ரூ.200,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு (Written Exam)

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி

இப்பணிகளுக்கு தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் நபர்கள் tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு ஆன்லைன் வழியாக விண்ணப்பம் செய்ய வேண்டும்.

விண்ணப்பம் செய்ய இறுதி நாள்: 11-11-2023