காலையில் எழுந்ததும் கிராம்பு தேநீர் பருகினால் உடலுக்கு இத்தனை நன்மைகள் கிடைக்குமா?

0
32
#image_title

காலையில் எழுந்ததும் கிராம்பு தேநீர் பருகினால் உடலுக்கு இத்தனை நன்மைகள் கிடைக்குமா?

கிராம்பு நம் உணவில் பயன்படுத்தும் மசாலா வகைகளில் ஒன்று.இது அதிக மணம் மற்றும் ஆரோக்கியத்தை அள்ளி கொடுக்கும் பொருளாகும்.இதில் தேநீர் செய்து பருகினால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும்.

கிராம்பு பயன்கள்:-

*கிராம்பில் அதிகளவு வைட்டமின் சி இருக்கிறது.இவை உடலில் வெள்ளை இரத்த அணுக்களை அதிகரிக்க செய்ய உதவுகிறது.

*செரிமான பிரச்சனை இருப்பவர்கள் காலையில் இலவங்கம் தேநீரை பருக பழகிக் கொள்ளுங்கள்.

*மலச்சிக்கல் பாதிப்பு இருப்பவர்கள் சூடு நீரில் 1/2 தேக்கரண்டி இலவங்கத் தூள் சேர்த்து பருகவும்.

*தினமும் கிராம்பு தேநீர் பருகி வந்தோம் என்றால் கல்லீரலில் உள்ள நச்சு கழிவுகள் முழுவதும் நீங்கி விடும்.

*பல் சொத்தை,வாய் துர்நாற்றம் இருப்பவர்கள் தினமும் இலவங்கம் 2 எடுத்து வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வருவதன் மூலம் அந்த பாதிப்புகள் முழுமையாக சரியாகி விடும்.

*எலும்பு மற்றும் மூட்டு ஆரோக்கியத்தை மேம்படுத்த கிராம்பு தேநீர் பருகுங்கள் விரைவில் தீர்வு கிடைக்கும்.காரணம் பிளாவனாய்டுகள்,மாங்கனீசு மற்றும் யூஜெனோல் அதிகளவில் இருக்கிறது.

தேவையான பொருட்கள்:-

*இலவங்கம்(கிராம்பு) – 5

*பட்டை – சிறு துண்டு

*இஞ்சி – சிறு துண்டு

*எலுமிச்சை சாறு – 1/2 தேக்கரண்டி

*வெல்லம் – சிறிதளவு

செய்முறை:-

அடுப்பில் ஒரு டீ போடும் பாத்திரம் வைத்து அதில் 1 1/2 கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.
பின்னர் அவை சிறிதளவு சூடேறி வந்ததும் எடுத்து வைத்துள்ள 5 கிராம்பு(இலவங்கம்).சிறு துண்டு பட்டை.சிறு துண்டு எடுத்த இஞ்சி சேர்த்துக் மிதமான தீயில் நன்கு கொத்திக விடவும்.

கொதிக்கும் நீரில் கிராம்பு,பட்டை,இஞ்சி சாறு முழுவதுமாக இறங்கியதும் அடுப்பை அணைத்து விடவும்.பின்னர் ஒரு கிளாஸில் 1/2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் சிறிதளவு வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு சேர்த்து கொள்ளவும்.பின்னர் தயாரித்து வைத்துள்ள கிராம்பு டீயை அதில் சேர்த்து நன்கு கலக்கி பருகவும்.இதில் சுவைக்காக வெள்ளை சர்க்கரை சேர்க்கக் கூடாது.