தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி தலைமை செயல் அதிகாரி எஸ் கிருஷ்ணன் ராஜினாமா செய்தார்!!! அப்போ நடந்தது தான் இதற்கு காரணமா!!?

0
41
#image_title

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி தலைமை செயல் அதிகாரி எஸ் கிருஷ்ணன் ராஜினாமா செய்தார்!!! அப்போ நடந்தது தான் இதற்கு காரணமா!!?

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் நிர்வாக இயக்குநரும் தலைமை செயல் அதிகாரியுமாக இருந்த எஸ் கிருஷ்ணன் அவர்கள் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்த சம்பவம் மெர்கண்டைல் வங்கி ஊழியர்களுக்கு மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.

சமீபத்தில் சில தினங்களுக்கு முன்னர் சென்னையில் கார் ஓட்டி வரும் ஓட்டுநர் ஒருவருடயை வங்கி கணக்கில் தவறுதலாக 9000 கோடி ரூபாய் பணம் அனுப்பப்பட்டது. இந்த விவகாரம் பெரிய அளவில் பேசப்பட்டது. இதன் காரணமாக தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி தலைமை செயல் அதிகாரி எஸ்.கிருஷ்ணன் அவர்கள் ராஜினாமா செய்திருக்க கூடும் என்று தகவல்கள் பரவத் தொடங்கியது.

ஆனால் வங்கி நிர்வாகம் சார்பில் இந்த தகவலை முற்றிலும் மறுத்துள்ளது. மேலும் தமிழ்நாடு மெர்தண்டைத் வங்கி நிர்வாக இயக்குனரும் தலைமை. செயல் அதிகாரியுமான எஸ்.கிருஷ்ணன் அவர்கள் தன்னுடைய சொந்த காரணங்களுக்காகவே வேலையை ராஜினாமா செய்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்திய ரிசர்வ் வங்கியிடம் இருந்து வழிகாட்டுதல் ஆலோசனை பெறப்படும் வரை எஸ்.கிருஷ்ணன் அவர்கள் தனது தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் பணியை தொடர்வார் என்று வங்கி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் செயல்பட்டு வந்த எஸ்கிருஷ்ணன் அவர்களுக்கு ஓய்வு பெறுவதற்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் இருக்கின்றது. இந்நிலையில் திடீரென்று இவர் ராஜினாமா செய்தது வங்கி ஊழியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஜூன் மாதம் வருமானவரித் துறையினர் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் தலைமை அலுவலகத்தில் வருமான வரிச் சட்டம் 1961 மற்றும் பிரிவு 285 பி.ஏ படி வங்கியில் உள்ள ஆவணங்களை சோதனையிட்டது. மேலும் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியானது ரிசர்வ் வங்கியின் நெருக்கமான கண்காணிப்பில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.