தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தர எதிர்ப்பு தெரிவித்து கன்னட அமைப்பினர் போராட்டம்!! பரபரப்பு சூழலில் கர்நாடகா!!

0
27
#image_title

தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தர எதிர்ப்பு தெரிவித்து கன்னட அமைப்பினர் போராட்டம்!! பரபரப்பு சூழலில் கர்நாடகா!!

காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக பல வருடங்களாக தமிழகம் – கர்நாடகா இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.ஒவ்வொரு ஆண்டும் தண்ணீர் தேவைக்காக கர்நாடகாவை தமிழகம் நம்பி இருக்கும் நிலை ஏற்பட்டு இருக்கிறது.ஆனால் தமிழகத்திற்கு முறையான தண்ணீர் திறந்து விடாமல் கர்நாடக அரசு மறுப்பு தெரிவித்து வருவதை வழக்கமாக கொண்டிருக்கிறது.

இதனால் ஒவ்வொரு முறையும் காவிரி மேலாண்மை வாரியத்திடம் தமிழக அரசு முறையிட்டு அதன் பின் தான் காவிரி நீர் திறந்து விடப்படுகிறது.இந்நிலையில் டெல்டா விவசாயிகள் மற்றும் பொது மக்களின் நலன் கருதி இந்த ஆண்டிற்கான தண்ணீரை திறந்து விடுமாறு கர்நாடக அரசிடம் தமிழக அரசு கோரிக்கை விடுத்தது.ஆனால் கர்நாடக அரசு போதிய மழை இல்லாததால் எங்களுக்கே தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்கிறது.அதனால் தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்து விட முடியாது என்று கர்நாடக அரசு திட்ட வட்டமாக தெரிவித்தது. இதையடுத்து வழக்கம் போல் தமிழக அரசு காவிரி மேலாண்மை ஆணையத்திடம் முறையிட்டது.நாள் ஒன்றுக்கு 24,000 கன அடி நீர் திறந்து விட வேண்டுமென்று தமிழக அரசு கோரிக்கை வைத்த நிலையில் தண்ணீர் இருப்பு அளவை வைத்து நாள் ஒன்றிற்கு 5000 கன அடி நீரை தமிழகத்திற்கு திறந்து விட கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.இதனால் வேறு வழியின்றி கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விட சம்மதித்து இருக்கிறது.

இந்நிலையில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட எதிர்ப்பு தெரிவித்தும் கர்நாடக அரசின் செயலைக் கண்டித்தும் அம்மாநிலத்தில் உள்ள கன்னட அமைப்பினர் மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏற்கனவே கடந்த 26 அன்று பெங்களூருவில் போராட்டம் நடத்தப்பட்டது.இந்நிலையில் இன்று வாட்டாள் நாகராஜ் தலைமையில் 100க்கும் மேற்பட்ட அமைப்புகளின் ஆதரவுடன் மாபெரும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.காலை 6 மணிக்கு தொடங்கிய இந்த போராட்டமானது மாலை 6 மணி வரை நடைபெற இருக்கிறது.

சில அமைப்புகள் மற்றும் சங்கங்கள் 26 ஆம் தேதிக்கு பதிலாக 29 ஆம் தேதி நடத்தப்படும் போராட்டத்தில் தங்களின் ஆதரவை தருகிறோம் என்று தெரிவித்திருந்தது.அதன்படி ஹோட்டல் உரிமையாளர் சங்கம்,காய்கறி கடைகள்,வணீக சங்கங்கள்,கர்நாடக சினமா வர்த்தக சபை,ஓலா,ஊபர் உள்ளிட்டவைகள் போராட்டத்திற்கு ஆதரவளித்துள்ளது.போராட்டம் வலுக்கும் என்பதினால் பள்ளி,கல்லுரிங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது.
ஆனால் ஐடி நிறுவனங்கள்,மருத்துவமனை,அரசு சார்ந்த அலுவலகங்கள் வழக்கம் போல் செயல் பட்டு வருகிறது.

இந்த போராட்டம் பெங்களூரில் டவுன் ஹாலில் இருந்து சுதந்திர பூங்கா வரை நடத்தப்பட இருப்பதால் 15000க்கும் மேற்பட்ட காவல் துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருக்கின்றனர்.அதேபோல் மாநிலம் முழுவதும் சுமார் 80,000 காவல் துறையினர் தொடர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் தொடர் போராட்டம் காரணமாக கர்நாடகாவில் பதற்றமான சூழல் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.