தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு வேதனையளித்த நிகழ்வு!! இனிமேல் இந்த சம்பவம் நிகழாமல் இருக்க அரசுக்கு வேண்டுகோள்!!

0
163
tamil-nadu-vetik-kazhagam-president-vijays-painful-incident-request-to-the-government-to-prevent-this-incident-from-happening-again
tamil-nadu-vetik-kazhagam-president-vijays-painful-incident-request-to-the-government-to-prevent-this-incident-from-happening-again

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு வேதனையளித்த நிகழ்வு!! இனிமேல் இந்த சம்பவம் நிகழாமல் இருக்க அரசுக்கு வேண்டுகோள்!!

சென்னை மெரினா கடற்கரையில் விமானப்படை சாகசத்தின் போது 5 பேர் உயிரிழந்த நிகழ்வு மிகுந்த வேதனை அளிப்பதாக தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நேற்று (06-10-24) மெரினா கடற்கரையில் இந்திய விமானப்படை சார்பில் வான்வழி சாகச நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்கு ஏற்றார் போல் இந்திய விமானப்படை கோரியதற்கு அதிகமாகவே நிர்வாக ரீதியிலான ஒத்துழைப்பும், வசதிகளையும் தமிழக அரசு ஏற்பாடு செய்திருந்தது.

மக்களுக்கு சிறந்ததொரு நிகழ்ச்சியை வழங்குவதற்காக தமிழக அரசின் காவல்துறை, தீயணைப்பு துறை, சென்னை பெருநகர மாநகராட்சி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை போன்ற துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட்டன. இந்த ஏற்பாடுகளினால் கூட்ட நெரிசல் தவிர்க்கப்பட்டது.

இருப்பினும் நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று என்பது போல் எதிர்பார்த்த மக்கள் கூட்டத்தை விட மிக மிக அதிக அளவில் மக்கள் திரண்டதால் நிகழ்ச்சி முடிந்ததும் திரும்பச் செல்லும் போது ஏற்பட்ட நெரிசலில் 5 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் அனைவரையும் வருத்தமடைய செய்துள்ளது. மேலும் முன்னேற்பாடு நடவடிக்கைகளை தமிழக அரசு மேம்படுத்தி இருக்க வேண்டும் என கண்டனங்களும் எழுந்தன.

இந்த சூழ்நிலையில் இந்த சம்பவத்தை பற்றி நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் கூறுகையில் இதுபோன்ற மக்கள் அதிகம் கூடுகின்ற நிகழ்வுகளில் அடிப்படை வசதிகளை அரசு செய்வதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்தார்.

இதுப்பற்றி அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் விமானப்படை சாகச நிகழ்ச்சியின் போது உயிரிழந்த மக்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதாகவும், மேலும் அரசு போதுமான அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்தவில்லை என ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளதால் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக் கொள்வதாக கூறியுள்ளார்.

https://x.com/tvkvijayhq/status/1843209181995692488