அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டம்! முதன்முதலாக தொடங்கி வைத்தார் தமிழகத்தின் முதலமைச்சர்!

0
141

அனைத்து சாதியை சார்ந்தவர்களும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தின் கீழ் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மற்ற ஜாதியினருக்கு பணி நியமன ஆணையை தமிழகத்தின் முதலமைச்சர் வழங்கியிருக்கின்றார். இந்த நிலையில், திருக்கோவில்களில் இருக்கின்ற காலிப்பணியிடங்களை இதன்மூலமாக நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு இருக்கிறது. பொன்னம்பல அடிகளார் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று இருகிறார்.

சென்ற 2006 ஆம் வருடம் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று ஒரு திட்டத்தை தொடங்கி வைத்த நிலையில், அந்த கட்சியின் பலவருட கனவு இன்று நிறைவேறி இருக்கிறது. இந்தத் திட்டத்தை தமிழகத்தின் முதலமைச்சர் ஸ்டாலின் நிறைவேற்றியிருக்கிறார் என சொல்லப்படுகிறது.

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கின்ற கோவில்களில் அர்ச்சகர்கள் பணிக்கு அனுப்பப்பட்ட இருக்கிறார்கள். முன்னதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ,திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி பொறுப்பேற்ற 100 தினங்களுக்குள் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டம் முதல் முறையாக நிறைவேற்றப்படும் என்று தெரிவித்திருந்தார் என்பது நினைவுகூறத்தக்கது.

இந்த நிகழ்ச்சியில் இருபத்தி நான்கு பேர் சிவாச்சாரியார்கள் 34 பேர் பட்டாச்சாரியார்கள், 20 பேர் ஓதுவார்கள் உட்பட 216 இந்து கோவில்களில் அர்ச்சகராக பொறுப்பேற்று இருக்கிறார்கள். அரசு சார்பாக தமிழகத்தின் முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் கே என் நேரு ,சுப்ரமணியன், சேகர் பாபு உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கிறார்கள்.

Previous articleஇறுதிவரை ஆதிக்கத்தில் இருந்த இந்திய அணி! திடீரென உயர்ந்த இங்கிலாந்து அணியின் ஸ்கோர்!
Next articleதமிழகத்தில் இன்று எங்கெல்லாம் மழை பெய்யுமாம்! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!