இறுதிவரை ஆதிக்கத்தில் இருந்த இந்திய அணி! திடீரென உயர்ந்த இங்கிலாந்து அணியின் ஸ்கோர்!

0
51

முதல் நாள் ஆட்டத்தில் வலுவாக இருந்த இந்திய அணி இரண்டாவது நாள் ஆட்டத்தை சற்று சொதப்பி விட்டது. இதன் காரணமாக, ரன்னும் குறைந்து போனது இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரரான ரோகித் ஷர்மாவும், ராகுலும் நல்ல தொடக்கம் அமைத்து கொடுத்தாலும் இரண்டாம் நாள் ஆட்டத்தில் இந்தியாவிற்கு சாதகமாக எதுவும் அமையவில்லை. இரண்டாவது நாள் ஆட்டம் இன்று ஆரம்பமானது. கே எல் ராகுல் மற்றும் ரஹானே நம்பிக்கையுடன் களம் இறங்கினார்கள். இருந்தாலும் மாற்றத்தின் முதல் இரண்டு ஓவர்களில் அந்த நம்பிக்கை தகர்ந்து போனது. இந்திய அணி இன்றைய போட்டியில் சொதப்பி விட்டது. அதாவது ஓவரின் 2-வது பந்தை ராபின்சன் வீச ராகுல் எதிர் கொண்டு அடிக்க முயற்சி செய்து வெளியேறினார். இரண்டாவது ஓவரிலேயே வெளியேறினார் இதன்காரணமாக 285 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து ஆரம்பமே இந்தியாவிற்கு மிகப் பெரிய பின்னடைவாக அமைந்துவிட்டது.

இதன் பிறகு ஜோடி சேர்ந்த ரிஷப் பண்ட் ஜடேஜா ஜோடி மிகவும் பொறுமையுடன் ரன் குவிப்பில் ஈடுபட்டார்கள். இவர்கள் இருவரின் முயற்சியால் இந்திய அணி 300 ரன்களை தாண்டியது. இருந்தாலும் அந்த பார்ட்னர்ஷிப் நீண்ட நேரம் நிலைத்து நிற்கவில்லை. சிறப்பாக விளையாடி வந்த ரிஷப் 37 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். முகமது சமி ஆகிப்போனார் கடைசியில் இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்த வேண்டிய பொறுப்பு ஜடேஜா விடம் ஒப்படைக்கப்பட்டது. ஒரு புறம் 40 ரன்களை எடுத்து அணியின் ரன்களை உயர்த்தினார் ஜடேஜா .இதன் காரணமாக முதல் இன்னிங்சில் இந்திய அணி 364 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதன் பின்னர் விளையாடிய இங்கிலாந்து அணி முதலில் சற்று ஏனோ தானோ என்று விளையாடியது. அதன் காரணமாகவே மிக விரைவில் விக்கெட்டுகள் சாய்ந்தன. தொடக்க ஆட்டக்காரர் டாமினிக் சிப்லி 11 க்கும் ஆசிப் டக் அவுட் ஆகி வெளியேறினார். இளம் வீரர் முகமது சுராஜ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவிற்கு நல்ல ஆரம்பத்தை கொடுத்தார்.

ஆனாலும் அடுத்தடுத்து வந்த அனுபவ வீரர்களான ஜரூர் பென்ஸ் உடன் ஜோடி சேர்ந்து இங்கிலாந்தை சரிவிலிருந்து மீட்டு வந்தார்கள். சிறப்பாக விளையாடிய ஜோ ரூட் நாற்பத்தி ஒன்பது ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இன்னொரு முனையில் தொடர்ச்சியாக மிகச் சிறப்பாக விளையாடி வந்த ஜோ ரூட் சீரான வேகத்தில் ரன்களை அதிகப்படுத்தினார் .இதன் காரணமாக முதல் நாள் ஆட்ட நேர இறுதியில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகளை இழந்து 119 ரன்களை எடுத்து இருக்கிறது. ஜோ ரூட் நாற்பத்தி எட்டு ரன்களுடனும் பெஸ்டோ 6 ரன்களுடனும் களத்தில் இருக்கிறார்கள்.